ஆந்திராவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாயுடன் சிகிச்சையின்போது உடனிருந்த குழந்தைக்கு, நோய் தொற்று பரவாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா தொற்று உலகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஏழை, பணக்காகரர், குழந்தைகள் - முதியவர் என பாரபட்சமின்றி அனைவரையும் சகட்டுமேனிக்கு தொற்றி வருகிறது. 

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாயுடன் இருந்த குழந்தைக்கு, நோய் தொற்று பரவவில்லை. நகரி பகுதியை சேர்ந்த பெண்கள் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில் ஒருவருக்கு 16 மாத குழந்தை இருந்த நிலையில், அந்த குழந்தையை உறவினர்கள் தங்களுடன் வைத்துக் கொள்ள மறுத்தனர்.

 

இதையடுத்து 18 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த தாயுடனேயே அந்தக் குழந்தையும் இருந்தது. தற்போது அந்தத் தாய் குணமடைந்த நிலையில், குழந்தையை பரிசோதித்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.