8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு.! அச்சத்தில் இருந்து விடுபடும் பொதுமக்கள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி சென்ற நிலையில் தற்போது பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 7633 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 61233 ஆக உயர்ந்துள்ளது.

Corona cases in India have dropped below 8 thousand

சரிவை நோக்கி செல்லும் கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பொதுமக்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் என லட்சக்கணக்கானோரை இழந்து தவித்தனர். தற்போது தான் கொரோனா பாதிப்பில் இருந்து  விடுபட்டு இயல்பு வாழ்க்கையை வாழ தொடங்கினர். ஆனால் பொதுமக்களை அச்சமடையும் வகையில் மீண்டும் டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு போன்ற 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 500க்கும் கீழ் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிதித்திருந்தது. அரசு மருத்துவமனையில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அடித்தது ஜாக்பாட்! 20 ஆயிரம் பேருக்கு வேலை.. மீண்டும் சிக்ஸர் அடித்த முதல்வர் ஸ்டாலின்!!

Corona cases in India have dropped below 8 thousand

தமிழகத்தில் 521 பேருக்கு பாதிப்பு

இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து சென்றது. நேற்று 10 ஆயிரத்திற்கு கீழாக இறங்கி 9111 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மருத்துவமனை மற்றும் வீடுகளில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா பதிப்பால் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் தற்போது 7633 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 521 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 257 பேர், பெண்கள் 264 பேர் அடங்குவர் மற்றும் 4 வெளிநாட்டு பயணிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பின் விகிதமானது வரும் நாட்களில் படிப்படியாக குறையும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

விடைத்தாள் திருத்தும் பணிக்கு வர மாட்டீங்களா.? தனியார் பள்ளிகளுக்கு செக் வைத்த அரசு தேர்வு துறை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios