Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் உச்சக்கட்ட பாய்ச்சலில் கொரோனா.. ஒரே நாளில் 2003 பேர் உயிரிழப்பு.. பாதிப்பு 3.5 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,003 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது.

corona affect... India reports 2,003 deaths in last 24 hours
Author
Maharashtra, First Published Jun 17, 2020, 11:24 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,003 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 10,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,54,065ஆக அதிகரித்துள்ளது. அதில், 1,55,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.1,86,935 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். 

corona affect... India reports 2,003 deaths in last 24 hours

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 2003 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில், 6,922 பேர் குணமடைந்தனர் வீடு திரும்பியுள்ளனர். 

corona affect... India reports 2,003 deaths in last 24 hours

இந்தியாவில் அதிகபட்சமாக பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் மாகாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,13,445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  5,537 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 48,019 பேருக்கும், டெல்லியில் 44,688 பேருக்கும், குஜராத்தில் 24,577 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் 1,409 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் பாதிப்பில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios