கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு - முழு விபரம் உள்ளே
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு ரயில்களுடன் மோதி தடம் புரண்ட விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இன்னும் பலர் ரயில் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. மோதிய வேகத்தில் பக்கத்தில் இருக்கும் தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் ரயில் பக்கவாட்டில் மோதியது.
இதில் மூன்று ரயில்களும் ஒன்றுக்கு ஒன்று மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இதுவரை இதுபோன்ற விபத்து நடந்ததில்லை என்றே கூறப்படுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பலர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் அவசரகால கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் ஹெல்ப்லைன் எண்களையும் வழங்கியுள்ளார். 033- 22143526/ 22535185 அதிகாரிகளால் ஹெல்ப்லைன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை பணியாளர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?
ஹவுராவில் உள்ள ஹெல்ப்லைன் எண்கள் - 033 - 26382217
காரக்பூர் ஹெல்ப்லைன் 8972073925, 9332392339
பாலசோர் ஹெல்ப்லைன் - 8249591559, 7978418322
ஷாலிமார் ஹெல்ப்லைன் - 9903370746
இதையும் படிங்க..சென்னை சென்ட்ரல் மெயில் உட்பட 7 ரயில்கள் ரத்து.. திருப்பி விடப்பட்ட 5 ரயில்கள் - முழு பட்டியல் இதோ