Asianet News TamilAsianet News Tamil

குறைந்தது கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி விலை... பயோலாஜிக்கல் இ நிறுவனம் அதிரடி!!!

கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை  840 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பயாலஜிக்கல் இ நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர். 

Corbevox corona vaccine price reduced from 840 to 250 rupees per dose
Author
India, First Published May 16, 2022, 8:39 PM IST

கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை  840 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பயாலஜிக்கல் இ நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர். கொரோனா என்னும் கொடிய வைரஸை அழிக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்ற நிலை உள்ளது. இதை அடுத்து மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை 840 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என பயோலாஜிக்கல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது. வரி நிர்வாகம் கட்டணம் சேர்த்து ஒரு டோஸ் விலை ரூ 400 ஆக இருக்கும் என பயோலாஜிக்கல் இ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பயாலஜிக்கல் இ நிறுவனத்தார் கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.

Corbevox corona vaccine price reduced from 840 to 250 rupees per dose

இங்கு இந்த தடுப்பூசி 12 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் அவசர பயன்பாட்டு பட்டியலில் இந்த தடுப்பூசியை இடம் பெறச்செய்வதற்கு பயாலஜிக்கல் இ நிறுவனத்தார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த தருணத்தில் இந்த தடுப்பூசியை பிற நாடுகள் அங்கீகரிப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை 840 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பயாலஜிக்கல் இ நிறுவனத்தார் தெரிவித்துள்ளனர்.

Corbevox corona vaccine price reduced from 840 to 250 rupees per dose

அதன்படி தனியார் தடுப்பூசி மையங்களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரி உட்பட, தனது கொரோனா தடுப்பூசியான கோர்பேவாக்சின் விலையை 840 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகக் குறைத்துள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனமான பயாலஜிக்கல் இ தெரிவித்துள்ளது. மேலும் வரிகளுடன் சேர்ந்து 400 ரூபாய் என்ற விலையில் பயனாளிகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தடுப்பூசியின் விலை தனியார் தடுப்பூசி மையங்களில், வரி மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உட்பட, ஒரு டோஸ் 990 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டபோது, கோர்பேவாக்ஸ் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு அதன் விலை ரூ. 145 என அரசின் தடுப்பூசி திட்டத்திற்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios