ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் குழந்தை திருடும் கும்பல் என கருதி 2 சாமியார்களையும் ஓட்டுநர் ஒருவரையும் உள்ளூர் மக்கள் அடித்து படுகொலை செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த gடுகொலை சம்பவத்தில் எந்த மத பின்னணியும் இல்லை என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும், பால்கர் படுகொலையை இந்துத்துவா ஆதரவாளர்கள் விடுவதாக இல்லை. இந்நிலையில், ரிபப்ளிக் டிவியில் இது பற்றி அதன் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி விவாதம் நடத்தினார்.

அப்போது திடீரென காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை இச்சம்பவத்தில் தொடர்புபடுத்தி அர்னாப் கோஸ்வாமி விமர்சித்தாக கூறப்படுகிது. இவரது பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அவரை கைது செய்யக்கோரி காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், நேற்று இரவு அர்னால் கோஸ்சுவாமி தனது டிவி பணிகளை முடித்துக் கொண்டு மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவருடைய காரை மறித்தனர். அதன்பின் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர்களிடம் பெரும்பாடு பட்டு தப்பித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். 

 

 

இதனால் ஆத்திரமடைந்த அர்னாப் கோஸ்வாமி அந்த இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் காங்கிரஸ் கைக்கூலிகள் என்றும் ஆவேசமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் ஊடகத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவை பார்க்க: எதற்காக, யாரால் தாக்கப்பட்டார் அர்னாப் கோஸ்வாமி..? விவரிக்கும் செய்தித் தொகுப்பு..! வீடியோ