காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு செவாலியே விருது; பிரான்ஸ் நாட்டின் உயரிய அங்கீகாரம்!
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு பிரெஞ்சு தூதரகத்தில் பிரான்ஸ் செனட் தலைவர் ஜெரார்ட் லார்ச்சரால் செவாலியே விருது வழங்கப்பட்டது.
மூத்த காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூருக்கு பிரான்சின் உயரிய செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த எழுத்தாளரான சசி தரூர் இந்தியாவின் இருண்ட காலம் முதலிய புகழ்பெற்ற பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு பிரெஞ்சு தூதரகத்தில் பிரான்ஸ் செனட் தலைவர் ஜெரார்ட் லார்ச்சரால் செவாலியே விருது வழங்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூருக்கு ஆகஸ்ட் 2022இல் இந்த விருதை பிரெஞ்சு அரசாங்கம் அறிவித்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை விருது வழங்கப்பட்டது.
"இந்தோ-பிரெஞ்சு உறவுகளை ஆழப்படுத்த டாக்டர் தரூரின் அயராத முயற்சிகள், சர்வதேச அமைதி மற்றும் ஒத்துழைப்பிற்கான அர்ப்பணிப்பு மற்றும் பிரான்சின் நீண்டகால நண்பராக இருந்ததற்காக இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது" என்று பிரெஞ்சு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 8 ஷார்ட்கட் தெரியாம எதுவும் செய்ய முடியாது! எல்லா டாஸ்க்கையும் சிம்பிளா முடிக்க இதுதான் வழி!
பிரான்ஸ் செனட் தலைவர் லார்ச்சர் தரூருக்கு விருது வழங்கி கவுரவித்து பேசுகையில், "டாக்டர் தரூர் பிரான்சின் உண்மையான நண்பர். பிரான்ஸ் மற்றும் அதன் கலாச்சாரம் பற்றிய ஆழமான புரிதல் கொண்டவர். இந்த விருதின் மூலம், உங்கள் சாதனைகள், உங்கள் நட்பு, பிரான்ஸ் மீதான உங்கள் அன்பு ஆகியவற்றை பிரெஞ்சு குடியரசு அங்கீகரிக்கிறது" என்று கூறினார்.
விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சசி தரூர், செவாலியே விருதை ஏற்றுக்கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்றார். "பிரான்ஸ், அதன் மக்கள், அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரம், குறிப்பாக அவர்களின் இலக்கியம் மற்றும் சினிமாவைப் போற்றும் ஒருவர் என்ற முறையில், உங்கள் நாட்டின் உயரிய விருதை நான் மிகவும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"இந்த விருதை ஒரு இந்தியருக்கு வழங்குவது பிரான்ஸ் - இந்தியா இடையேயான ஆழமான மற்றும் நீண்ட காலமாக நீடிக்கும் உறவின் அம்சமாக அளிக்கப்படும் அங்கீகாரம் ஆகும்" என்று சசி தரூர் கூறினார்.
சொளையா ரூ.10,000 தள்ளுபடி! தாராளமான ஆஃபரில் கிடைக்கும் ஐவூமி ஈ-ஸ்கூட்டர்கள்!