கர்நாடக சட்டமன்ற தேர்தல்... 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!!
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கர்நாடக தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. குறிப்பாக பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியைச் சந்தித்த ஆப்பிள் சிஇஓ டிம் குக்! எதிர்காலத்தில் முதலீடுகளை அதிகரிக்க திட்டம்!
ஜேடிஎஸ் கட்சிக்கு பழைய மைசூர் பகுதியில் மட்டுமே செல்வாக்கு உள்ளதால் அவர்கள் அங்கு மட்டுமே வெற்றி பெற முடியும் என கூறப்படுகிறது. இதை அடுத்து அனைத்தும் கட்சிகளும் தீவிர தேர்தல் பிர்ச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதோடு பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகையின் கன்னத்தைக் கிள்ளிய எடியூரப்பா! சூடுபிடிக்கும் கர்நாடகா தேர்தல் களம்!
இந்த நிலையில் அந்தந்த கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 4 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் கர்நாடக தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.