தனித்து போட்டி என்று அறிவித்துள்ளதன் மூலம் பா.ஜ.கவிற்கு எதிரான மெகா கூட்டணி திட்டத்திற்கு ஆரம்பகட்டத்திலேயே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குண்டு வைத்துள்ளார்.

தனித்து போட்டி என்று அறிவித்துள்ளதன் மூலம் பா.ஜ.கவிற்கு எதிரான மெகா கூட்டணி திட்டத்திற்கு ஆரம்பகட்டத்திலேயே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குண்டு வைத்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் நாட்டிலேயே அதிக தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பா.ஜ.கவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி உறுதியாக உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியையும் கூட்டணியில் சேர்த்தால் மட்டுமே பா.ஜ.கவை வீழ்த்த முடியும் என்பது உத்தரபிரதேசத்தில் நிதர்சமான உண்மை.

ஆனால் மாயாவதியேல ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி என்பதை திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேரசத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. மாயாவதியுடன் கூட்டணி வைத்தால் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை இழக்க நேரிடும் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது. 

இதனால் அந்த இரண்டு மாநிலங்களிலும் கூட்டணி பேச்சுவார்த்தையை மாயாவதியுடன் இழு இழு என்று காங்கிரஸ் இழுத்தது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாயாவதி இரண்டு மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துவிட்டார். மேலும் மெகா கூட்டணி என்று கூறி பகுஜன் சமாஜ் கட்சியை அழிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார். தனித்து போட்டியிட்டாலே மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் வென்றுவிடலாம் என்று காங்கிரஸ் கனவுக் கோட்டை கட்டுவதாக கூறிய மாயாவதி, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்ப தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் விவகாரத்தில் தலைக்கணத்துடன் இருக்கும் காங்கிரஸ் கட்சியால் பா.ஜ.கவை வீழ்த்த முடியாது என்றும் மாயாவதி கூறியுள்ளார். இதனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் மெகா கூட்டணி அமைத்து பா.ஜ.கவை வீழ்த்தலாம் என்கிற அகிலேஷ் மற்றும் ராகுல் கனவில் மண் விழுந்துவிட்டதகா கூறப்படுகிறது. அதே சமயம் மாயாவதி தனது நிலைப்பாட்டை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாற்றிக் கொள்வார் என்று சமாஜ்வாடி கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.