Congress Foundation Day 2022:இந்தியா என்ற சித்தாந்தத்தின் மீது தாக்குதல்!காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
இந்தியா என்ற சித்தாந்தத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. சமூகத்தில் வெறுப்பு பரப்பப்பட்டு பிளவு உண்டாக்கப்படுகிறது அதற்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்
இந்தியா என்ற சித்தாந்தத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. சமூகத்தில் வெறுப்பு பரப்பப்பட்டு பிளவு உண்டாக்கப்படுகிறது அதற்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்
காங்கிரஸ் கட்சியின் 138-வது ஆண்டுவிழா இன்று அந்தக் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. கடந்த 1885ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரால் தொடங்கப்பட்டது காங்கிரஸ் கட்சி. 1885ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மும்பையில் கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருத கல்லூரியில் முறைப்படி காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது அன்றைய தினம் நாடுமுழுவதும் 72 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் சென்ற கார் மைசூரு அருகே விபத்து:பலர் காயம்: வீடியோ
காங்கிரஸ் கட்சி தொடங்கி 138 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்திய அரசியலிலேயே அதிகஊழல் நிறைந்த குடும்பம் என்றால் அது சோனியா காந்தி குடும்பம்தான்: பாஜக விளாசல்
இந்த நிகழ்ச்சியில் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான ஆட்சி மக்களிடையே வெறுப்பை விதைக்கிறது, பிளவுகளை உருவாக்குகிறது. இந்தியா என்ற சித்தாந்தம் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறது.
நாட்டில் வெறுப்பு என்று ஆழமாக வேறூன்றுகிறது. மக்கள் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மையால் பெரும் சமையை சுமக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு கவலைப்படவில்லை. காங்கிரஸ் கட்சி இளைஞர்களை, பெண்களை, சமூகத்தில் அடித்தட்டு மக்களை, அறிவாந்தர்களை ஒருங்கிணைத்து வேலையின்மைக்கு எதிராகப் போராடி தீர்வு காணும்.
ராகுல்காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களை ஒருங்கிணைக்க இது முன்னெடுப்புதான், நாடுமுழுவதும் உள்ள ஒரு கோடி காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது புத்துணர்ச்சியை அளிக்கிறது.காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் பரவலாக மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதைக் காட்டுகிறது,
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது இந்தியா வெற்றிகரமான வலிமையான ஜனநாயகமாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக சூப்பர்பவராகவும், அணுஆயுதம் மற்றும் ராஜாங்க உறவுகளிலும் வலிமையாக இருந்தது. வேளாண்மை, மருத்துவம், தகவல்தொழில்நுட்பம், சேவைத்துறையில் இந்தியாமுன்னணியில் இருந்தது.
மகளின் ஆபாச வீடியோ வெளியிட்டதை தட்டிக்கேட்ட BSF வீரர் அடித்துக் கொலை: குஜராத்தில் பயங்கரம்
ஜனநாயகம் மற்றும் அனைவருக்குமான வளர்ச்சியைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது. அரசியலமைப்புச்சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து, அனைவருக்கும் சமஉரிமைகள் கிடைக்க வேண்டும், வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்