Lynching:BSF: மகளின் ஆபாச வீடியோ வெளியிட்டதை தட்டிக்கேட்ட BSF வீரர் அடித்துக் கொலை: குஜராத்தில் பயங்கரம்
மகளின் ஆபாச வீடியோவை இணையத்தில் கசியவிட்ட மாணவரிடம் நியாயம் கேட்கச் சென்ற பிஎஸ்எப் பிரிவில் வேலைபார்த்த தந்தையை அடித்து ஒரு கும்பல் கொலை செய்துள்ளனர்.
மகளின் ஆபாச வீடியோவை இணையத்தில் கசியவிட்ட மாணவரிடம் நியாயம் கேட்கச் சென்ற பிஎஸ்எப் பிரிவில் வேலைபார்த்த தந்தையை அடித்து ஒரு கும்பல் கொலை செய்துள்ளனர்.
குஜராத்தின் கேடா மாவட்டம், நாதியாத் நகர் அருகே சக்லசி கிராமத்தைச் சேர்ந்தவர் மேல்ஜிபாய் வகேலா. இவர் எல்லைப் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக வகேலா சொந்த கிராமத்துக்கு வந்திருந்தார்.
இந்துக்களே கத்திய கூர்மையாக வெச்சிருங்க!பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் மீது 7 பிரிவில் வழக்கு
பள்ளியில் படிக்கும், வகேலாவின் 15 வயது மகளும், சக மாணவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இதில் அந்த மாணவர் வகேலாவின் மகளின் ஆபாச வீடியோ காட்சியை இணையதளத்தில் கசியவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதையடுத்து, வகேலாவும் அவரின் குடும்பத்தினரும், அந்த மாணவர் வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது வகேலா குடும்பத்தினரும், அந்த மாணவர் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதில் அந்த மாணவரின் குடும்பத்தினர் வகேலாவை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பிஎஸ்எப் வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, வகேலா குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்யவே போலீஸார் வழக்குப்பதிவு செய்து 7 பேரைக் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா முதல்வர் KCR-க்கு பின்னடைவு: BRS எம்எல்ஏக்களை பேரம்பேசிய வழக்கு சிபிஐக்கு மாற்றம்
மூத்த காவல் அதிகாரி பிஆர் பாஜ்பாய் கூறுகையில் “ பிஎஸ்எப் வீரர் வகேலா கொலை வழக்கில் இதுவரை 7 பேரைக் கைது செய்துள்ளோம். மகளின் ஆபாச வீடியோ வெளியிட்ட மாணவர் குடும்பத்தாரிடம் தட்டிக்கேட்ட வகேலாவை அந்த மாணவரின் குடும்பத்தினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர், இதில் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த விவகாரம் குறித்து பிஎஸ்எப் பிரிவுக்கும் தகவல் தெரிவித்தோம். அவர்களும் வந்து முறைப்படி விசாரித்து சென்றுவிட்டனர்” எனத் தெரிவி்த்தார்
எல்லைப் பாதுகாப்புப்படை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் “ பிஎஸ்எப் படை வீரர் வகேலா கொல்லப்பட்ட செய்தி அறிந்தோம். இது தொடர்பாக குஜராத் போலீஸாரிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். வகேலா குடும்பத்தாரிடமும் பிஎஸ்எப் பிரிவு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. அந்த குடும்பத்தினருக்கு உடனடியாக பண உதவி உள்ளிட்ட உதவிகளை பிஎஸ்எப் படை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.