PM Modi Brother Accident:பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் சென்ற கார் மைசூரு அருகே விபத்து:பலர் காயம்: வீடியோ

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவர் குடும்பத்தினர் சென்ற கார் மைசூரு அருகே இன்று விபத்தில் சிக்கியது.

pm modis brother Prahlad Modi Mercedes-Benz SUV car meets with accident in mysuru

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவர் குடும்பத்தினர் சென்ற கார் மைசூரு அருகே இன்று விபத்தில் சிக்கியது.

பிரஹலாத் மோடி அவரின் மனைவி மற்றும் மகன், மருமகள், பேரன் ஆகியோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மைசூரு அருகே இருக்கும்  பந்திப்பூர் வனச்சரணாலயத்துக்கு மெர்சடிஸ் பென்ஸ் எஸ்யுவி காரில் சென்றனர். 

இவர்கள் சென்ற காருக்குப்பின் பாதுகாப்பு வாகனமும் சென்றது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் மைசூரு அருகே கடகோலா பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்தில் சிக்கியது.

இதில் காரின் முன்பகுதி மோசமாக சேதமடைந்தது. பிரஹலாத் மோடியின் பேரனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றவர்கள் சிறிய காயத்துடன் மைசூரு நகரில் உள்ள ஜேஎஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை. வாகனத்தில் ஏர்பேக் இருந்ததால் பெரிதாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

இந்த விபத்துக் குறித்து அறிந்ததும் மாவட்ட எஸ்பி சீமா லட்கர் மற்றும் டிஎஸ்பி கோவிந்தராஜு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios