காங்கிரஸை ஏமாற்றிய நன்கொடை இயக்கம்! பலரும் ரூ.138 மட்டும் செலுத்தியதாகத் தகவல்!
பெரும்பாலான நன்கொடையாளர்கள் 138 ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். 32 பேர் மட்டுமே ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம் அளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி 'நாட்டிற்காக நன்கொடை' என்ற நாடு தழுவிய நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடங்கிய 48 மணிநேரத்திற்குள், அக்கட்சிக்கு 1,13,000 பேரிடம் இருந்து ரூ.4 கோடி நிதி கிடைத்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இந்த நிதி திரட்டும் இயக்கம் மூலம் கட்சிக்கான நிதியை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, கட்சிக்கு 1.3 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடையாளர்களிடமிருந்து 4 கோடி ரூபாய் கிடைத்துள்ளது எனத் தெரியவருகிறது.
கணிசமான தொகை திரட்டப்பட்ட போதிலும், கட்சியின் 138வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், பெரும்பாலான நன்கொடையாளர்கள் 138 ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய தொகை செலுத்தியவர்கள் கூட பலர் ரூ.1.38 லட்சம் நிதியைச் செலுத்தியுள்ளனர்.
பிக்பாக்கெட் வழக்கு: ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, அசோக் கெலாட், சிபி ஜோஷி, நிரஞ்சன் பட்நாயக், சுஷில் குமார் ஷிண்டே, டிஎஸ் சிங் தியோ, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கேரா ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்களாக உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
பெரும்பாலான பங்களிப்பாளர்கள் ரூ.138 கொடுத்துள்ளனர். 32 பேர் மட்டுமே ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம் அளித்துள்ளனர். 626 பேர் ரூ.13,000 அளித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் சிறிய தொகையையே கொடுத்துள்ளனர்.
donateinc.in இணையதளம் 11 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. போட் (bot) மூலம் இணையதளத்தை ஹேக் செய்ய 20,000 க்கும் மேற்பட்ட முறை முயற்சி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 1,300 க்கும் மேற்பட்டவை தரவுகளைத் திருட முயன்றுள்ளன.
டிசம்பர் 21: ஆண்டின் மிக நீண்ட இரவைக் கொண்ட நாளாக இருக்கும்! ஏன் தெரியுமா?