டிசம்பர் 21: ஆண்டின் மிக நீண்ட இரவைக் கொண்ட நாளாக இருக்கும்! ஏன் தெரியுமா?
டிசம்பர் 21ஆம் தேதி பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் 2023ஆம் ஆண்டின் மிகக் குறுகிய பகல் மற்றும் மிக நீண்ட இரவைக் கொண்ட நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் குறுகிய நாள் சங்கிராந்தி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், சங்கிராந்தி என்பது ஒரு நாள் மட்டும் அல்ல. இது பூமி அச்சு சாய்வு சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தருணத்தைக் குறிக்கிறது.
பூமியின் வட துருவமானது 23.4 டிகிரி சாய்வில் சூரியனிலிருந்து அதன் அதிகபட்ச தூரத்தில் இருக்கும். இதனால் சூரிய ஒளி வட அரைக்கோளத்தில் மெல்லியதாக பரவுகிறது.
இதன் விளைவாக, வடக்கு அரைக்கோள வானத்தில் சூரியன் மிகக் குறைந்த நேரமே தோன்றுகிறது. இது மிக குறுகிய பகலும் மிக நீண்ட இரவும் ஏற்படக் காரணமாகிறது. இந்த வானியல் நிகழ்வு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பை ஒட்டி அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்!
இந்த சங்கிராந்தி நிகழ்வு குளிர்காலத்தின் தொடக்கத்தையும், பருவங்களின் சுழற்சியையும் பிரதிபலிக்கிறது. கோடைகால சங்கிராந்தி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அப்போத, அதிக பகல் நேரமும் குறுகிய இரவு நேரமும் ஏற்படும்.
இந்த வானியல் நிகழ்வு பல்வேறு சமூகங்களில் ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டது. பிரிட்டனில் உள்ள ஸ்டோன்ஹெஞ்ச் மற்றும் இல்லினாய்ஸில் இந்த நாள் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
நீண்ட இரவுக்குப் பின் சூரியன் தோன்றுவதை சூரியனின் மறுபிறப்பாகக் கருதி, மெழுகுவர்த்திகளை ஏற்றி கொண்டாடும் வழக்கமும் உள்ளது.
குளிர்கால சங்கிராந்தியை யூல் நோர்ஸ் மக்களும், ஆங்கிலோ-சாக்சன் பேகன்களும் கொண்டாடினர். ஈரானியர்கள் குளிர்கால சங்கிராந்தியை 'யால்டா இரவு' என்று கொண்டாடுகிறார்கள்.
ஃபின்னிஷ் புராணத்தில் குளிர்கால சங்கிராந்தி பற்றிய கதை ஒன்று சொல்லபடுகிறது. லூஹி சூரியனையும் சந்திரனையும் திருடி ஒரு மலைக்குள் சிறைபிடித்து வைத்ததாகவும் அதனால் தான் குளிர்கால சங்கிராந்தி நிகழ்வு ஏற்படுகிறது என்றும் ஃபின்னிஷ் புராணம் சொல்கிறது.
மழை பாதிப்பு: நெல்லை, தூத்துக்குடியில் 5வது நாளாக நாளையும் விடுமுறை அறிவிப்பு