சுதந்திர தின விழாவை புறக்கணித்த கார்கே.. ஆனால் அவர் சொன்ன வலுவான செய்தி இதுதான்..

செங்கோட்டையில் நடைபெற்ற 77வது சுதந்திர தின விழாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புறக்கணித்தார்.

Congress chief Mallikarjuna Kharge boycotted the Independence Day celebrations.. But his strong message was this..

இன்று 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையின் ஒரு பகுதியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்திய இடத்தில் காலியாக இருந்த இருக்கைகளில் மல்லிகார்ஜுன் கார்கேவின் பெயருடன் ஒரு நாற்காலி இருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Congress chief Mallikarjuna Kharge boycotted the Independence Day celebrations.. But his strong message was this..

எனினும் மல்லிகார்ஜுன கார்கே, கடந்த கால பிரதமர்களின் பங்களிப்புகளை எடுத்துரைத்து வலுவான பதிவு செய்தியை அனுப்பினார். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மௌலானா ஆசாத், ராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடு மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு கார்கே தனது வீடியோ செய்தியில் அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, ராஜீவ் காந்தி, பிவி நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் போன்ற காங்கிரஸ் பிரதமர்களின் பங்களிப்புகளையும் அவர் எடுத்துரைத்தார். மேலும் பாஜகவின் அடல் பிஹாரி வாஜ்பாய் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தான் உலகையே வழிநடத்துகிறது.. சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..

அந்த வீடியோவில் பேசிய அவர் "ஒவ்வொரு பிரதமரும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் தான் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது என்று இன்று சிலர் கூற முயற்சிக்கின்றனர்," என்று கூறி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் "அடல் பிஹாரி வாஜ்பாயுடன், அனைத்து பிரதமர்களும் தேசத்தைப் பற்றி சிந்தித்து, வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனால் இன்று ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் தன்னாட்சி அமைப்புகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்பதை வேதனையுடன் கூறுகிறேன். குரல்வளையை ஒடுக்க புதிய கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சிகள், சிபிஐ, அமலாக்க இயக்குனரகம், வருமான வரித்துறை ரெய்டுகள் மட்டுமின்றி, தேர்தல் கமிஷனும் வலுவிழந்து வருகிறது.எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாயை அடைத்து, சஸ்பெண்ட் செய்து, மைக்குகளை முடக்கி, பேச்சுகள் ஒடுக்கப்படுகின்றன...” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், எய்ம்ஸ், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றின் உருவாக்கத்தை பட்டியலிட்டு பாராட்டிய கார்கே,. நேரு, சுதந்திர இந்தியாவில் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தை ஊக்குவித்தார் என்றும் தெரிவித்தார். லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தியின் கொள்கைகள் இந்தியாவை ஆத்ம நிர்பார் (தன்னம்பிக்கை) ஆக்க உதவியது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “ பெரிய தலைவர்கள் புதிய வரலாற்றைப் படைக்க கடந்த கால வரலாற்றை அழிக்கவில்லை, எல்லாவற்றுக்கும் பெயர் மாற்ற முயல்கிறார்கள் - கடந்த கால திட்டங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்களை பெயர் மாற்றி, ஜனநாயகத்தை சர்வாதிகாரப் போக்கால் கிழித்தெறிகிறார்கள். இப்போது நாட்டில் அமைதியை நிலைநாட்டிய பழைய சட்டங்களின் பெயரை மாற்றுகிறார்கள்.” என்று கூறியுள்ளா.

முன்னதாக, X சமூக ஊடக தளத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார். அவரின் பதிவில் “ பாரத் மாதா ஒவ்வொரு இந்தியனின் குரல்! அனைத்து நாட்டு மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது 'பாரத் ஜோடோ யாத்ரா'வில் இருந்து சில எண்ணங்களைப் ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டார்.

சுதந்திர தின விழா.. பிரதமர் மோடி அணிந்திருந்த தலைப்பாகையை கவனச்சீங்களா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios