Asianet News TamilAsianet News Tamil

இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமைப் பதவிக்கான மற்றொரு போட்டியாளர் எனப் பேசப்பட்டது ஆனால், இன்றைய கூட்டத்தில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்து, காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.

Congress Chief Mallikarjun Kharge To Lead Opposition Bloc INDIA sgb
Author
First Published Jan 13, 2024, 2:46 PM IST

தீவிர ஆலோசனைக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தியா கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமைப் பதவிக்கான மற்றொரு போட்டியாளர் எனப் பேசப்பட்டது ஆனால், இன்றைய கூட்டத்தில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்து, காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது.

தலைவரைத் தேர்ந்தெடுப்பது இந்தியா கூட்டணியின் பல சவால்களில் ஒன்று மட்டுமே. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் சுமூகமாக உடன்பாடு ஏற்பட வேண்டும்.

'ஶ்ரீராமன் தீவிர அசைவப் பிரியர்!' புதிய சர்ச்சையை பற்ற வைத்த கார்த்தி சிதம்பரம்!

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 2024 லோக்சபா தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவதைத் தடுக்கும் நோக்கில் உருவாகியுள்ளது.

Congress Chief Mallikarjun Kharge To Lead Opposition Bloc INDIA sgb

அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த இடங்களையும் பகிர்ந்துகொள்ள தயாராக இல்லாததால் சமாஜ்வாடி கட்சி அதிருப்தி அடைந்திருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கூட்சியிடம் 6 இடங்களை தங்களுக்கு விட்டுத் தரக் கோரிய நிலையில், தேசியத் தலைமையின் உறுதிமொழியை மீறி ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இதன் எதிரொலியாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. கமல்நாத்தும் ம.பி. மாநிலத் தலைவர் பதவியி இருந்து நீக்கப்பட்டார்.

ஆம் ஆத்மி கட்சியுடனான காங்கிரஸ் கட்சியின் உறவு சர்ச்சைக்குரியதாக உள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி அதிக தொகுதிகளில் போட்டியிட பெற விரும்புகிறது. இதுமட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சி கோவா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் தமிழ்நாட்டில் உதயமாகும் 7 புதிய மாவட்டங்கள்! அறிவிப்பு எப்போது?

Follow Us:
Download App:
  • android
  • ios