Asianet News TamilAsianet News Tamil

ஜார்க்கண்டில் அடிச்சு தூக்கும் காங்கிரஸ்..! அதிர்ச்சியில் பாஜக..!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

congress allaince leads in jharkhand
Author
Jharkhand, First Published Dec 23, 2019, 12:38 PM IST

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக அண்மையில் தேர்தல் நடைபெற்றது. முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. நக்சல் பாதிப்புகள் அதிகம் இருந்தாலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது.

congress allaince leads in jharkhand

வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இடையில் பாஜக 33 இடங்களில் முன்னிலை பெற்று இழுபறி நீடித்தது. பின் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளது. தற்போது வரையில் காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

congress allaince leads in jharkhand

பாஜக 30 இடங்களிலும், ஜே.வி.எம் 3 இடங்களிலும் பிறகட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் பட்சத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி ஏற்பார். எனினும் மீண்டும் பாஜக தலைமையிலேயே ஆட்சி அமையும் என தற்போதைய முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios