Asianet News TamilAsianet News Tamil

Smriti Irani:அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி: ஸ்மிருதி இரானிக்கு வெற்றி

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரின் மகளுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துப் பரப்பியதை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ராமேஷ், பவன் கேரா, நெட்டா டி சோசா ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Cong leaders sent a summons regarding Smriti Irani's libel lawsuit
Author
New Delhi, First Published Jul 29, 2022, 5:14 PM IST

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரின் மகளுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துப் பரப்பியதை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ராமேஷ், பவன் கேரா, நெட்டா டி சோசா ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரின் மகள் மற்றும் குடும்பத்தார் கோவாவில் போலியான உரிமத்தில் ஹோட்டலும், மதுபாரும் நடத்துகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ராமேஷ், பவன் கேரா, நெட்டா டி சோசா  ஆகியோர் குற்றம்சாட்டினர். 

முக்கிய தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் 2-வது மூத்த நீதிபதி ஏஎம் கான்வில்கர் ஓய்வு

Cong leaders sent a summons regarding Smriti Irani's libel lawsuit

இறந்தவர் பெயரில் உரிமம் எடுத்து ஸ்மிருதி இரானி மகள் பார் நடத்துவதாக குற்றச்சாட்டு கூறினார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஸ்மிருதி இரானி, இதை வாபஸ் பெறாவிட்டால் அவதூறு வழக்குத் தொடருவேன் என எச்சரி்த்திருந்தார்.

பர்தா சாட்டர்ஜி மகள் வீட்டில் கொள்ளை: திருட்டு நாடகம் என எதிர்க்கட்சி விளாசல்

இதையடுத்து, ஜெய்ராம் ராமேஷ், பவன் கேரா, நெட்டா டி சோசா ஆகியோர் என்னைப் பற்றி அடிப்படை ஆதாரங்கள் இன்றி, பொய்யான தகவல்களை தங்கள் ட்விட்டர் பதிவுகளையும் சமூக ஊடகங்களில் பேசியுள்ளனர். அதை நீக்க வேண்டும். 

இல்லாவிட்டால் தனக்கு அவதாறு பிரச்சாரம் செய்ததற்காக ரூ.2 கோடி இழப்பீடு தர வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

Cong leaders sent a summons regarding Smriti Irani's libel lawsuit

இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவுகளை இன்று பிறப்பித்தது அதில், “ எதிரமனுதாரர்கள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரின் மகளுக்கு எதிராக, சமூக ஊடகங்களான ட்விட்டர், பேஸ்புக், யூடியூப்,இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பதிவிட்ட கருத்துக்கள், வீடியோக்கள், புகைப்படங்களை அடுத்த 24 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கருத்துக்களை பேஸ்புக், ட்விட்டர் நிறுவனம் நீக்கும்.

இனிமேலாவது குறையுமா! டிசம்பர் 1ம் தேதி முதல் சிகிரெட் பாக்கெட்டில் புதிய படம், எச்சரிக்கை

ஸ்மிருதி இரானி மரியாதைக்கு களங்கும் விளைவிக்கும் நோக்கில் பொய்யான, அவதூறுகளை 3 பேரும் பரப்பியுள்ளனர். உண்மையான நிலவரங்களை அறியாமல், உறுதி செய்யாமல் ஸ்மிருதி இரானிக்கு எதிராக எதிரமனு தாரர்கள் பொய்யான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதனால் இடைக்கால நிவாரணமா இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது ” எனத் தெரிவித்தார்
இதையடுத்து, வழக்கை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios