ஊரடங்கு நேரத்திலும் கள்ளக்காதலியை திருட்டு தனமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த மார்க்சிஸ்ட் பிரமுகரை போலீசார் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. 

கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஒருவர், மார்க்சிஸ்ட் கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. ஆனால், கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த திருமணமாகி 2 குழந்தைகள்  உள்ள பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. திருவனந்தபுரத்தில் வழக்கறிஞர்களுக்கு என்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு இருவரும் அடிக்கடி சந்தித்து  உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;- குடிமகன்களுக்கு குஷியான அறிவிப்பு... நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு...!

இந்நிலையில்,  ஊரடங்கு அமலுக்கு வந்ததால் கள்ளக்காதலர்களால் சந்திக்க முடியாதநிலை பெரும் மன வருத்தத்தில் இருந்து வந்தார். ஆனால், கணவர் இல்லாத நேரத்தை சரியாக பயன்படுத்திகொண்ட அந்த பெண் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரழைத்து உல்லாசமாக இருந்து  வந்துள்ளனர். போலீசார் சோதனை செய்யும் போதெல்லாம் வழக்கு தொடர்பாக சென்று வந்ததாக கூறிவந்துள்ளார். இதனையடுத்து, இவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் இவரை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தனர். 

இதையும் படிங்க;-  நமக்கு கொரோனா வராது என யாரும் அலட்சியமா இருக்காதீங்க... சென்னையைக் காப்பாற்ற களமிறக்கப்பட்ட ராதாகிருஷ்ணன்..!

இதற்கிடையே அந்த  இளம்பெண்ணின் கணவரின் உறவினர் ஒருவர் கோட்டயத்தில் திடீரென உயிரிழந்தார்.  இதையடுத்து இறுதிச்சடங்கில் பங்கேற்க இளம்பெண்ணின் கணவர் புறப்பட்டு  சென்றார்.  ஆனால், அங்கு சென்ற கணவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக கூறி 14 நாட்கள் தனிமையில்  இருக்குமாறு  சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டனர். இதனால், அவர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் நிலை ஏற்பட்டது. கணவர் எப்படியாவது போகட்டும் என்று நினைத்து, உடனே கள்ளக்காதலனிடம் உடனே வீட்டுக்கு கிளம்பி வரும் படி பெண் கூறியுள்ளார். 

இதனையடுத்து, கிளம்பி வந்த வழக்கறிஞர் இளம்பெண்ணின் வீட்டுக்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இவற்றையலெ்லாம் தீவிரமாக கண்காணித்து வந்த போலீஸ்  காரில் வந்த வழக்கறிஞரை மடக்கி  பிடித்து, கள்ளக்காதலி வீட்டிலேயே 14 நாட்கள் தனிமையில் இருக்க வலியுறுத்தினர். இதனால் வசமாக மாட்டிக்கொண்ட  வழக்கறிஞர் அதிர்ச்சியில் செய்வதறியாது உறைந்தார். மேலும், அவர்  தப்பித்து செல்ல வாய்ப்பு உள்ளதால் இரவிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.