collage girl murder her father
அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், அவருடைய தந்தையை கண்டம் துண்டமாக வெட்டி வீட்டிலேயே புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசாம் மாநிலம், பீஸ்வாநாத் மாவட்டத்தை சேர்ந்த முதுகலை பட்டம் படித்து வரும் இளம் பெண் உட்பட 3 பேர் 70 வயது மதிக்கதக்க, முதியவரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்த பெண் கூறுகையில். தான் கொலை செய்தது தன்னுடைய தந்தை என்றும். அவர் தான் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை தான் தடுத்த போது தன்னை கோடாரியால் தாக்க முயன்றதாகவும், ஆத்திரத்தில் அவரிடம் இருந்து கோடாரியைப் பிடுங்கி அவரை (தந்தையை) தானே கண்டம் துண்டமாய் வெட்டி கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இந்த கொலையை மறைப்பதற்காக ஒரு அறையில், தந்தையின் சடலத்தை 3 நாட்கள் மறைத்து வைத்ததாகவும், சடலத்தில் இருந்து துர்நாற்றம் வரவே, மூன்று நாட்கள் கழித்து 15 அடி குழி தோண்டி சடலத்தை புதைத்தோம். ஆனால் இப்போது மாட்டிக்கொண்டோம் என போலிசாரின் விசாரணையில் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
