நிறைவேறும் நீண்ட நாள் கனவு! மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வரலாற்றில் கடந்து வந்த பாதை இதுதான்!

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவாக இருப்பதால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

chronology of women reservation bill from 1996 to 2023 sgb

193 நாடுகளின் தேசிய நாடாளுமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் சதவீதத்தின் அடிப்படையில் இந்தியா 148வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், நம் நாட்டுப் பெண்களின் நீண்ட காலக் கனவான மகளிருக்கு 33% இடஒதுக்கிடு வழங்கும் மசோதா இன்று புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா 1996 முதல் கடந்து வந்த பாதையை நினைவுகூரலாம்.

1996

இந்திய நாடாளுமன்றத்தில் 12 செப்டம்பர் 1996 அன்று பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றி விவாதிக்கப்பட்டது. ஹெச்.டி.தேவே கவுடா தலைமையிலான அரசாங்கம் 1996 இல் முதன்முதலில் மசோதாவை அறிமுகப்படுத்தியது.

இருப்பினும், உறுதியான திட்டம் எதுவும் இல்லாததால் அது வெறும் சம்பிரதாயமாக இருந்தது. இந்த மசோதா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைவர் கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்திற்கான போராட்டம், வார்த்தைப் போரால்  சீர்குலைந்தது.

NEET UG: அடுத்த நீட் தேர்வு 2024 மே 5ஆம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

chronology of women reservation bill from 1996 to 2023 sgb

1998

84வது அரசியலமைப்பு திருத்த மசோதாவாக பெண்களுக்கு இடம் வழங்கும் மசோதாவை 12வது மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியது. காங்கிரஸ் தனது சொந்தக் கட்சித் தலைவர்கள் சிலரனி் அழுத்தத்தால் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான ஒதுக்கிடு (OBC)  குறித்த சர்ச்சை கொண்டுவரப்பட்டு இந்த மசோதா தடுத்து நிறுத்தப்பட்டது.

சரத் பவார், எந்த மாற்றமும் இன்றி நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆதரவாக கடைசி நேரம் வரை இருந்தார். இந்த முறையும், வாஜ்பாய் தலைமையிலான அரசு முன்கூட்டியே கலைக்கப்பட்டதால், மசோதா காலாவதியானது.

2000-2001

2000 குளிர்கால கூட்டத் தொடரின் போது 21.12.2000 மற்றும் 22.12.2000 ஆகிய தேதிகளில் லோக்சபாவில் இந்த மசோதா பரிசீலனை மற்றும் நிறைவேற்றுவதற்காக பட்டியலிடப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை பரிசீலிக்கவே முடியவில்லை. மேற்படி மசோதாவை பரிசீலித்து நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு 19.2.2001 அன்று கொடுக்கப்பட்டது, ஆனால் அது நிறைவேறவில்லை.

2003-2004

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2002 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில்  இரண்டு முறை லோக்சபாவில் மசோதாவைக் கொண்டுவந்தது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆதரவளிப்பதாக உறுதியளித்த போதிலும் பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்ற முடியவில்லை.

வீடு புகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்! கனடா காலிஸ்தான் குழு பொறுப்பேற்பு!

chronology of women reservation bill from 1996 to 2023 sgb

2008-2010:

இந்த முறை மசோதா ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது. நிலைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்து, சமாஜ்வாதி, ஜேடி (யு) மற்றும் ஆர்ஜேடி ஆகியவற்றின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் 2010 இல் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. நான்கு ஆண்டுகளாக அது நிலுவையில் இருந்து 2014 இல் காலாவதியானது.

2023

தற்போது புதிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட முதல் மசோதாவாக மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் முக்கிய அம்சமாக பெண்களுக்கான இட ஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு இருக்கும் என்றும் பின்னர் தேவைப்பட்டால் நீட்டித்துக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த முறை காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் பல மாநிலக் கட்சிகள் இதற்கு ஆதரவாக இருப்பதால் இந்த மசோதா இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது மட்டுமின்றி, பெரும்பாலான மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல்: பிரதமர் மோடி பெருமிதம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios