டேராடூனில் குளோரின் வாயுக்கசிவு.. சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்..

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் குளோரின் வாயு கசிவு, மூச்சுத் திணறல் காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

Chlorine gas leak in Dehradun.. People evacuated safely due to difficulty in breathing.. Rya

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பிரேம் நகர் காவல் நிலையத்தின் ஜான்ஜ்ரா பகுதியில் குளோரின் வாயு கசிந்ததால் அப்பகுதி மக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. இன்று காலை அங்கு திடீரென வாயு கசிந்ததால், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் குடியிருப்பாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) டேராடூன் அஜய் சிங் இதுகுறித்து பேசிய போது “  வாயு கசிவு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.” என்று தெரிவித்தார். மேலும் “ டேராடூனில் உள்ள பிரேம் நகர் காவல் நிலையத்தின் ஜான்ஜ்ரா பகுதியில் உள்ள காலி ப்ளாட்டில் வைக்கப்பட்டிருந்த குளோரின் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் பற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார், என்டிஆர்எப், எஸ்டிஆர்எஃப் மற்றும் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.” என்றும் கூறினார்.

மாதம் ரூ.1.42 லட்சம் சம்பளம்.. வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

சஹாஸ்பூர் எம்.எல்.ஏ சஹ்தேவ் சிங் பண்டிர் இதுகுறித்து பேசிய போது “ 7 சிலிண்டர் குளோரின் அப்பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்டது. அதில் ஒரு கசிவு இருந்தது. அது ஒரு பெரிய பேரழிவாக மாறியிருக்கலாம், இருப்பினும், அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் நிலைமை நிர்வகிக்கப்பட்டது," என்று தெரிவித்தார். எனினும் இந்த வாய்க்கசிவு காரணமாக ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

மக்களவை தேர்தல் 2024: ஜன., 14 முதல் நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!

முன்னதாக இதே போன்றொரு சம்பவம் 2017 இல் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தது. அங்குள்ள ஜல் சன்ஸ்தான் (யுஜேஎஸ்) நீர் விநியோக மையத்தில் இருந்து குளோரின் வாயு கசிந்ததால் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios