தலாய் லாமாவை உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பெண் ஒருவர் பீகாரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலாய் லாமாவை உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பெண் ஒருவர் பீகாரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போத்கயாவுக்கான தனது வருடாந்திர சுற்றுப்பயணத்தை நிறுத்தி வைத்திருந்த தலாய் லாமா இந்த ஆண்டு மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதனால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் பீகார் மாவட்டத்தில் தலாய் லாமா பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால், இன்று அதிகாலை உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியதோடு எச்சரிக்கையும் விடுத்தனர்.
இதையும் படிங்க: வருகிறது ரிமோட் மின்னணு வாக்கு எந்திரம் ! தேர்தல் ஆணையம் அறிமுகம்
மேலும் சாங் சியாலான் என அடையாளம் காணப்பட்ட சீன உளவாளியின் ஓவியங்களை வெளியிடப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு, அதிகாரிகள் அவரைப் பற்றிய தகவல்களை வழங்குமாறு குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டனர். அந்த சந்தேகத்திற்குரிய சீன உளவாளி ஒரு வருடத்திற்கும் மேலாக போத்கயா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகிறார். இருப்பினும், சீனப் பெண் தங்கியிருப்பது குறித்து வெளிநாட்டுப் பிரிவில் எந்தப் பதிவும் இல்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த 6 நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கட்டாயம்... மன்சுக் மாண்டவியா அதிரடி!!
இந்த நிலையில் இன்று காலை கால் சக்ரா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலாய் லாமா கலந்துக்கொண்டு உரையாற்றினார். டிச.31 வரை மூன்று நாட்களுக்கு அவர் உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தலாய் லாமாவை உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பெண் ஒருவர் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
