இதுதான் சீனாவின் சிக்கலான பிரசார நெட்வொர்க்: வெளுத்து வாங்கிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
நாட்டுக்குக் களங்கம் ஏற்படுத்தும் தளங்களுக்கு அந்நிய நிதியுதவி கிடைத்துவருகிறது என்ற செய்தி அம்பலமாகியிருப்பதால், மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
சீனாவின் சதித் திட்டம் நியூயார்க் டைம் மூலம் வெளிப்படுத்தி இருப்பது முதல் முறை அல்ல, மாறாக இது இந்தியாவின் எழுச்சியை எதிர்க்கும் சக்திகளின் சிக்கலான சதி என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த நியூஸ்க்ளிக் இணையதளம் சீன ஆதரவுப் பிரச்சாரத்திற்காக ரூ.38 கோடி நிதி பெற்றதாக நியூயோர்க் டைம் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அமைச்சர் அனுராக் தாக்கூருடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றியும் அரசைப் பற்றியும் பொய்கள் மற்றும் வெறுப்புகளைப் பரப்புவதில் ஒரு சுயநலம் மிக்கவர்கள் குழு பெரும் முதலீடு செய்து செயல்பட்டு வருகிறது. இதை சமீபத்தில் மணிப்பூரில் பார்த்திருக்கிறோம்." என்று அவர் கூறினார்.இந்தச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் ஒரு அரசியல் தலைவர் இருக்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவுக்காக இந்தியாவில் பிரசாரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர்! சீன சதித் திட்டம் அம்பலமானது எப்படி?
"நியூஸ் க்ளிக் போன்ற தளங்களால் வெளியிடப்படும் இந்தக் கட்டுக்கதைகளை ராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்கள் கிட்டத்தட்ட கண்மூடித்தனமாக எதிரொலிக்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று அதே விஷயங்களைச் சொல்கிறார்கள்" எனவும் அமைச்சர் ராஜீவ் கூறினார். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது, நீதித்துறை சமரசம் செய்துகொள்கிறது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியில்லை என்பது போன்ற செய்திகளைத்தான் இவர்கள் பரப்புகிறார்கள் எனவும் ராஜீவ் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார்.
பங்குச்சந்தையில் எல்லாம் போச்சு! விரக்தியில் குடும்பத்தையே கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!
"இது எளிமையான நடவடிக்கை அல்ல. இது ஒரு சிக்கலான சதி. இது பொருளாதார வளர்ச்சி, உலக நாடுகளின் சமூகத்தின் மீதான அதன் நம்பிக்கை உள்ளிட்ட இந்தியாவின் எழுச்சிக்கு எதிராக நாட்டிற்கு வெளியே உள்ள சக்திகளால் நிதியுதவி அளித்து ஊக்குவிக்கப்படும் பிரச்சார நெர்வொர்க்" என்று அவர் மேலும் கூறினார்.
தவறான தகவல் என்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்து என்று கூறிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "ஒவ்வொரு முறையும் தவறான தகவல்களை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது, இந்த தளங்கள் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து, பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் அணிதிரள்கின்றன. சுதந்திரமான பேச்சுரிமைக்கு அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பது, ஒரு நாட்டின் எழுச்சியைத் தடுக்கும் நோக்கில் தவறான தகவல்களைப் பரப்புவதாக இருக்கக் கூடாது." எனவும் வலியுறுத்தினார்.
"நமது நாடு, அரசு, நம்பிக்கை, சமூகம் ஆகியவற்றுக்கு களங்கம் ஏற்படுத்தும் தளங்களுக்கு அந்நிய நாடு தீவிரமாக நிதியுதவி செய்து வருகிறது என்ற செய்தி அம்பலமாகியிருப்பது மிகவும் அவசியமானது. நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.