பங்குச்சந்தையில் எல்லாம் போச்சு! விரக்தியில் குடும்பத்தையே கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!
ஆந்திராவைச் சேர்ந்த விஜய் பங்குச்சந்தை முதலீட்டில் பணத்தை இழந்த விரக்தியில் மனைவி, குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்த குடும்பம் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக பெங்களூரு போலீஸார் நடத்திய விசாரணையில், அந்தக் குடும்பத்தின் தலைவரும் சாப்ட்வேர் இஞ்சினியருமான வீராஞ்சனேயா விஜய் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான வீராஞ்சனேயா விஜய் பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணத்தை இழந்தது தெரியவந்தது. விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது குடியிருப்பில் இறந்து கிடந்தனர். அவர்கள் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜூலை 31 அன்று இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
விஜய் தனது மனைவி ஹைமாவதி (29) மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட இரண்டு மகள்கள் மோக்ஷா மற்றும் சிருஷ்டி ஆகியோரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் மோபிதேவியைச் சேர்ந்த ஹைமாவதி இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் நன்றாகப் படித்து பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாகப் பணியாற்றியவர்கள். தம்பதியினர் தங்கள் இரு மகள்களுடன் வாடகை குடியிருப்பில் தங்கியிருந்தனர்.
ஹைமாவதியின் சகோதரர் மூன்று நாட்களாக போனில் அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார். ஆனால், ஹைமாவதி வீட்டில் இருந்து எந்த பதிலும் வராததால் வியாழன் அன்று பெங்களூரு சென்று விசாரிக்கப் போயிருக்கிறார். அப்போது வீட்டில் அனைவரும் இறந்து கிடந்ததைக் கண்டிருக்கிறார்.
துபாயில் தூங்கிக்கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய ராட்டினம்! சுற்றுலா பயணிகள், வணிகர்கள் அதிருப்தி!