Asianet News TamilAsianet News Tamil

India-China border clash: இந்தியா சீனா எல்லை மோதல்: இரு அவைகளில் இருந்தும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

அருணாச்சலப்பிரதேச எல்லையில் இந்திய, சீன ராணுவம் மோதல் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி மக்களவை, மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

Chinese aggression, opposition parties walk out  Rajya Sabha and Lok sabha
Author
First Published Dec 14, 2022, 12:38 PM IST

அருணாச்சலப்பிரதேச எல்லையில் இந்திய, சீன ராணுவம் மோதல் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி மக்களவை, மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சீ பகுதியில் கடந்த 9ம் தேதி சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றபோது அதை இந்திய ராணுவம் தடுத்தது. அப்போது,  இருதரப்பு படைகளுக்கும் இடையே வார்த்தை மோதலும், அதைத் தொடர்ந்து கைகலப்பும் ஏற்பட்டது. இதில் இருதரப்பு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. ஆனால், உயிரிழப்பு ஏதும் இல்லை. 

சீனா இந்திய ராணுவம் மோதல்! வைரலாகும் வீடியோ: உண்மை என்ன?

Chinese aggression, opposition parties walk out  Rajya Sabha and Lok sabha

இந்த விவகாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று இரு அவைகளிலும் விளக்கம் அளித்தார். ஆனால், இந்த விளக்கத்துக்குப்பின் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளனர்.

எல்லை மோதல்: இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு: சீனாவுக்கு கடும் எச்சரிக்கை

இன்று காலை மாநிலங்களவை கூடியதும், காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கூறுகையில்  “ சீன ராணுவம் இந்திய ராணுவம் மோதலில் ஈடுபட்டது தொடர்பாகவும், சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்த முழுமையான தகவல் தேவை” எனத் தெரிவித்தார்

மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் கூறுகையில் “ எதுபற்றி விவாதம் நடத்தும் முன்பாக நோட்டீஸ் அளிக்க வேண்டும் நோட்டீஸ் அளிக்காமல் விவாதம் நடத்த முடியாது” எனத் தெரிவித்தார்
இதையடுத்து, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், என்சிபி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, ஜேஎம்எம், சிவசேனா எம்.பி.க்கள் கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர்.

Chinese aggression, opposition parties walk out  Rajya Sabha and Lok sabha

இதற்கிடையே மக்களவைியல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர். எல்கர் பரிசத் மாவோயிஸ்ட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்டான் சாமி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பினர்.

சீனாவுடன் மோதல்!இந்தியத் தரப்பில் உயிரிழப்பு ஏதும் இல்லை:ராஜ்நாத் சிங் விளக்கம்

முன்னதாக பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், பிரதிநிதிகள், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று திடீரென கூடி ஆலோசனை நடத்தினர். சீன, இந்திய ராணுவம் மோதலில் உண்மை நிலவரம் என்ன, சீன அத்துமீறல் ஏன் என்பது குறித்து அரசிடம் உரியவிளக்கம் தேவை என எதிர்க்கட்சிகள் கோரின. 

Chinese aggression, opposition parties walk out  Rajya Sabha and Lok sabha

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், சிவசேனா, சிபிஐ, சிபிஎம், என்சிபி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், என்சி, திமுக, சமாஜ்வாதி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர். எல்லைப் பிரச்சினையில் மத்தியஅரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios