அருணாச்சலப்பிரதேச எல்லையில் இந்திய, சீன வீரர்கள் இடையே கைகலப்பு நடந்த விவகாரம் வெளியானபின், ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அருணாச்சலப்பிரதேச எல்லையில் இந்திய, சீன வீரர்கள் இடையே கைகலப்பு நடந்த விவகாரம் வெளியானபின், ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சீ பகுதியில் கடந்த 9ம் தேதி சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்று, அங்கு ஏற்கெனவே இருக்கும் சூழலை தன்னிச்சையாக மாற்ற முயன்றது. சீன வீரர்களின் இந்த தன்னிச்சையான செயலை இந்திய வீர்கள் துணிச்சலுடன், தீர்மானமாக எதிர்த்தனர்.

சீனாவுடன் மோதல்!இந்தியத் தரப்பில் உயிரிழப்பு ஏதும் இல்லை:ராஜ்நாத் சிங் விளக்கம்

இதனால் இருதரப்பு படைகளுக்கும் இடையே வார்த்தை மோதலும், அதைத் தொடர்ந்து கைகலப்பும் ஏற்பட்டது. இதில் இருதரப்பு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. ஆனால், உயிரிழப்பு ஏதும் இல்லை. இதையடுத்து, இரு நாட்டு கமாண்டர்களும் தலையிட்டதையடுத்து, சீன ராணுவத்தினரும், இந்திய படையினரும் திரும்பிச் சென்றனர்.

Scroll to load tweet…

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் இந்தியா சீனா வீரர்கள் மோதல் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சீ பகுதியில் கடந்த 9ம் தேதி சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்று, அங்கு ஏற்கெனவே இருக்கும் சூழலை தன்னிச்சையாக மாற்ற முயன்றது. சீன வீரர்களின் இந்த தன்னிச்சையான செயலை இந்திய வீர்கள் துணிச்சலுடன், தீர்மானமாக எதிர்த்தனர். 
இதனால் இருதரப்பு படைகளுக்கும் இடையே வார்த்தை மோதலும், அதைத் தொடர்ந்து கைகலப்பும் ஏற்பட்டது. இரு நாட்டு கமாண்டர்களும் தலையிட்டதையடுத்து, சீன ராணுவத்தினரும், இந்திய படையினரும் திரும்பிச் சென்றனர்

இந்தியா-சீனா ராணுவீரர்கள் மோதல்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

இந்த மோதலில் இரு தரப்பு படையினருக்கும் இடையே சிறு காயங்கள் ஏற்பட்டன. நம்முடைய இந்திய ராணுவத்துக்கு எந்தவிதமான உயிரிழப்பும் இல்லை என்று இந்த அவையில் தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சீன, இந்திய ராணுவம் மோதலில் ஈடுபடுவது போன்றவும், ஒருவருக்கு ஒருவர் கையில் கட்டையைக் கொண்டு தாக்கிக்கொள்வது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
அருணாச்சலப்பிரதேச எல்லையில், இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டது தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ வீடியோ, படங்கள் ஏதும் இருதரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. இந்த சூழலில் இந்தவீடியோ வெளியாகியுள்ளது.

எல்லையில் மோதிக்கொண்ட இந்தியா - சீனா ராணுவம்.. அருணாச்சல பிரதேசத்தில் நடப்பது என்ன ? முழு விபரம் !

ஏசியாநெட் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராஜேஷ் கல்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் “ இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் அருணாச்சலப்பிரதேசம், தவாங் பகுதியில் இந்தியா, சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்தமோதல் என்று கூறப்படுகிறது. ஆனால், ராணுவம் தரப்பில் இதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யவில்லை. எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியா என்பதும் உறுதியாகவில்லை. நம்முடைய வீரர்கள் யாரையும் நுழையவிடமாட்டார்கள்”எனத் தெரிவித்துள்ளார்