பிரதமர் நரேந்திர மோடி புவிசார் அரசியலில் முக்கியத் தலைவர் என்று சிலி அதிபர் கேப்ரியல் போரிக் பாராட்டியுள்ளார். மோடி உலகத் தலைவர்கள் அனைவருடனும் உரையாடக்கூடியவர் என்றும் எடுத்துரைத்தார்.

இந்தியாவுக்கு வந்திருக்கும் சிலி அதிபர் கேப்ரியல் போரிக் ஃபான்ட், பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான குணங்களைப் புகழ்ந்துரைத்தார். பிரதமர் மோடி உலகத் தலைவர்கள் அனைவருடனும் பேசக்கூடியவர் என்றும், "முக்கிய புவிசார் அரசியலில் முக்கியத் தலைவர்" என்றும் குறிப்பிட்டார்.

ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "பிரதமர் மோடி அவர்களே, இன்று நீங்கள் உலகத் தலைவர்கள் அனைவருடனும் பேசக்கூடிய தகுதியைப் பெற்றுள்ளீர்கள். டிரம்ப், ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியம், கிரீஸ், ஈரான் நாடுகளின் தலைவர்களுடன், லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுடன் பேச முடியும். இப்போது வேறு எந்த தலைவரைப் பற்றியும் இப்படிச் சொல்ல முடியாது. எனவே, இன்றைய புவிசார் அரசியல் சூழலில் நீங்கள் ஒரு முக்கியத் தலைவராக இருக்கிறீர்கள்" என்றார்.

விண்வெளியில் இருந்து இந்தியாவின் தோற்றம் எப்படி இருக்கும்? சுனிதா வில்லியம்ஸ் பதில்

Scroll to load tweet…

இந்தியாவில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், "நான் முதல் முறையாக அரசுமுறை பயணமாக இங்கு வந்துள்ளேன்... இங்கு எங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்... கடந்த 16 ஆண்டுகளாக சிலியில் இருந்து யாரும் இங்கு வரவில்லை. அந்த 16 ஆண்டுகளில் இந்தியா நிறைய மாறிவிட்டது" என்றார்.

அவரது வருகையை ஒட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை ராஷ்டிரபதி பவனில் சிலி அதிபர் கேப்ரியல் போரிக் ஃபான்ட் அவர்களுக்கு சிறப்பு விருந்து அளித்தார்.

சிலி இந்தியாவுன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது எனவும் போரிக் கூறினார். "சிலி உலகத்துடன் இணைந்த ஒரு நாடு, இப்போது நாங்கள் இந்தியாவுடனான இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். இன்று, நாங்கள் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

வடகிழக்கு மாநிலங்கள் குறித்து முகமது யூனிஸ் சர்ச்சை பேச்சு; இந்தியா கடும் கண்டனம்

சிலி - இந்தியா உறவின் முக்கியத்துவம்:

சிலி - இந்தியா இடையேயான உறவின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். மூலோபாய தன்னாட்சி மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். "சிலி உலகத்துடன் இணைந்த ஒரு நாடு. நாங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சார்ந்திருக்கவில்லை, ஆனால் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், எங்கள் பிராந்தியமான லத்தீன் அமெரிக்கா, ஆசியா பசிபிக் நாடுகள், ஜப்பான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் உறவுகளை வைத்துள்ளோம். இப்போது இந்தியாவுடனான எங்கள் உறவுகளில் இன்னும் ஆழமாகப் பணியாற்ற விரும்புகிறோம். இன்று சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்," என்று அதிபர் போரிக் கூறினார்.

"பிரதமர் மோடியுடன் நடந்த கூட்டத்தில் கலாச்சார பரிமாற்றம், அண்டார்டிக் ஆய்வு போன்ற முக்கியமான விஷயங்களில் சில ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். சிலி அண்டார்டிக் கண்டத்திற்கான உலகின் கதவு," என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, சிலி அதிபர் ஏப்ரல் 1 முதல் 5 வரை இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 76 ஆண்டு நிறைவை ஒட்டி இந்தியா சிலி அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதிபர் போரிக்குடன் வெளியுறவுத்துறை, விவசாயம், சுரங்கம், பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் கலாச்சாரங்கள், கலை மற்றும் பாரம்பரியத்துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பல வணிகத் தலைவர்கள் வந்துள்ளனர்.

சிலி அதிபர் மும்பை மற்றும் பெங்களூருவுக்கு பயணம்:

டெல்லியைத் தவிர, அதிபர் போரிக் ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் செல்ல இருக்கிறார். அதிபர் போரிக் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. அதிபர் போரிக்கும், பிரதமர் மோடியும் முதன்முதலில் 2024 நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் போது சந்தித்தனர் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை விமானத்தில் டெல்லி வந்தடைந்த போரிக்கிற்கு இந்தியா உற்சாகமான வரவேற்பு அளித்தது. பிரதமர் மோடி ஹைதராபாத் இல்லத்தில் அதிபர் போரிக்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் அவர் சந்தித்தார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் அளித்த விருந்து நடைபெற்றது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அதிபர் போரிக்கை சந்தித்தார்.

கைலாசா பெயரில் மெகா நில மோசடி! பொலிவியா பழங்குடிகளை ஏமாற்றிய நித்தியானந்தா!