வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கருத்துகள் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குள்ளாக்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ், வடகிழக்கு மாநிலங்கள் குறித்து கூறிய கருத்துகள் இந்தியாவில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்தக் கருத்துக்களை "இந்தியா மீதான தாக்குதல்" என்று கண்டித்திருக்கிறார். வங்கதேசத்தின் அணுகுமுறை வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்தானது என்றும், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் பவன் கெரா விமர்சித்துள்ளார்.

யூனுஸ் தனது நான்கு நாள் சீனப் பயணத்தின்போது கூறிய கருத்துகளின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. "இந்தியாவின் கிழக்குப் பகுதியான ஏழு மாநிலங்கள் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை இந்திய நிலத்தால் சூழப்பட்ட பகுதி. அவை கடலை அடைய எந்த வழியும் இல்லை" என்று பேசியுள்ளார். வங்கதேசம் இந்த பிராந்தியத்தில் "கடலின் பாதுகாவலராக சய என்று அவர் கூறுகிறார். "இது ஒரு பெரிய வாய்ப்பைத் திறக்கிறது. இது சீனப் பொருளாதாரத்திற்கு ஒரு நீட்சியாக அமையலாம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாடகை செலுத்த முடியாமல் ஆபிஸ் பாத்ரூமில் வசிக்கும் சீன இளம் பெண்!

சீனாவுக்கு ஆதரவாகப் பேசும் வங்கதேசம்:

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பின்னர், சீனாவுக்கு அந்நாடு அளித்துவரும் ஆதரவுக்கு மத்தியில், யூனுஸ் கூறியுள்ள இந்தக் கருத்துக்கள் கவனம் ஈர்த்துள்ளன. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமருக்கு அடைக்கலம் அளித்த இந்தியா, அங்குள்ள இடைக்கால அரசாங்கத்தின் புவிசார் அரசியல் நகர்வுகளைக் கவனித்து வருகிறது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளும் கடுமையான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன.

வங்கதேச விடுதலை தினத்தன்று நட்புரீதியாக பிரதமர் நரேந்திர மோடி யூனுஸுக்கு கடிதம் எழுதி, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

வடகிழக்கு மாநிலத் தலைவர்கள் கருத்து:

ஆனால், இப்போது வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் கூறியுள்ள செய்திகள் இப்போது மீண்டும் பதட்டங்களைத் தூண்டியுள்ளன. திரு. யூனுஸின் கருத்துக்களுக்கு அசாம் முதல்வர் சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வடகிழக்கு பகுதியை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் இன்னும் வலுவான ரயில் மற்றும் சாலை வலையமைப்புகளை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

"இது வரலாற்று ரீதியாக, இந்தியாவிற்குள் இருக்கும், வடகிழக்கை பிரதான நிலப்பகுதியிலிருந்து தனிமைப்படுத்தும் முயற்சி. இது ஆபத்தானது. அங்கு வலுவான ரயில் மற்றும் சாலை அமைப்புகளை உருவாக்குவது கட்டாயமாகும். வடகிழக்கை இந்தியாவின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் மாற்று சாலைப் பாதைகளை ஆராய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்," என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

"இது குறிப்பிடத்தக்க பொறியியல் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், உறுதியோடு புதுமையான முறையில் இதைச் செய்ய முடியும். யூனிஸின் இத்தகைய ஆத்திரமூட்டும் அறிக்கைகளை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்றும் அவர் கூறினார்.

யூனுஸின் கருத்துக்கு திரிபுராவில் உள்ள திப்ரா மோத்தா கட்சியின் தலைவர் பிரத்யோத் மாணிக்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "ஒரு காலத்தில் சிட்டகாங்கை ஆண்ட நமது பழங்குடி மக்களை ஆதரிப்பதன் மூலம் இந்தியா கடலுக்குச் செல்லும் பாதையை உருவாக்க வேண்டிய நேரம் இது" என அவர் கூறினார். "1947ஆம் ஆண்டு அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினாலும், துறைமுகத்தை விட்டுக்கொடுத்தது இந்தியாவின் மிகப்பெரிய தவறு. திரு. யூனுஸ் தாங்கள்தான் கடலின் பாதுகாவலர் என்று நினைக்கலாம். திரிபுரா அவர் குறிப்பிடும் துறைமுகத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது," என்றும் அவர் கூறியுள்ளார்.

விண்வெளியில் இருந்து இந்தியாவின் தோற்றம் எப்படி இருக்கும்? சுனிதா வில்லியம்ஸ் பதில்