chief minister manik sargar have nothing in his account great man

முதல்வரின் கையிருப்பு ரூ.1520... வங்கி கணக்கில்ரூ.2410.. மொபைல் போன் இல்லை....இந்தியாவில் தான்..!

ஒரு மாநில முதல்வர் இப்படி எல்லாம் இருப்பாரா என்ற ஆச்சர்ய அலையை ஏற்படுத்தி உள்ளது திரிபுரா முதலமைச்சர் மானிக் சர்க்கார் வர்களின் வங்கி கணக்கு விவரமும், மொபைல் பயன்படுத்தாத விசித்தரமும்....

திரிபுரா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக தான்பூர் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் தலைவரும் முதல் அமைச்சருமான மானிக் சர்கார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார்.

நிதி விவரம்:

இந்த மனுவில்,அவருடைய நிதி விவரம் கொடுக்கப்பட்டு உள்ளது அதில்,அவரது அபிடவிட்டில் ஜனவரி 20 ந்தேதி வரை அவரது வங்கி கணக்கில் ரூ 2,410.16 இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதே போன்று கடந்த 2013 தேர்தலில் அவரது வங்கி கணக்கில் ரூ.9720.37 இருந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நீண்ட கால முதல்வர்

திரிபுராவின் நீண்ட கால முதலமைச்சர் சர்க்கார்தான்

1998 ஆம் ஆண்டு முதல் முதல் அமைச்சராக இருந்து,ஆறாவது முறை திரிபுராவின் நீண்ட கால முதலமைச்சராக இருப்பவர் சர்க்கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது

கட்சி சம்பளம்

69 வயதானஇவர் தனது சம்பளத்தை கூட எடுத்துக்கொள்ளவில்லை.தனது சம்பளத்தை கட்சி நிதியாக வழங்கி வருகிறார். மேலும், 10,000 ரூபாய் மட்டும் மாதம் தோறும் கட்சியிலிருந்து பெற்று வருகிறார்.

பரம்பரை சொத்து

அவரது அபிடவுட்டில் அகர்தலாவில் 0.0118 ஏக்கர் பரப்பளவில் விவசாய அல்லாத நிலம் உள்ளதாகவும் ,அவரது உடன் பிறந்தோருடன் இணைந்து ஒரே பரம்பரையாக சொத்தாக அது உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

ஒரு மொபைல் கூட கிடையாது

ஒரு மொபைல் போன் இல்லை.அவருக்கு சமூக ஊடக கணக்கு, மின்னஞ்சல் கணக்குகளும் இல்லை. இவை எதுவும் அவருக்கு கிடையாது.

ஒரு முதல்வர் இப்படியெல்லாம் இவ்வளவு சாதாரணமாக வாழ முடியுமா என்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது