தகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து, 2010-ல் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள் (ஆர்டிஐ) கொண்டு வரக்கோரி சமூக ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுதாரருக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், தகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட 3 நீதிபதிகள் ஒரே தீர்ப்பையும், சந்திரசூட், ரமணா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து நீதிபதிகளுக்கு ஓரளவு பாதுகாப்பும் வழங்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டப்படி உச்சநீதிமன்றமும் பொது அமைப்புதான். வெளிப்படைத்தன்மையால் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படமாட்டாது என்று தீர்ப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.