அரசு அலுவலகங்க வேலை நேரம் மாற்றம்... மின்சார பயன்பாட்டை குறைக்க பஞ்சாப் அரசு நடவடிக்கை!!
பஞ்சாப்பில் அதிகரித்து வரும் மின் தேவையை சீராக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பஞ்சாப்பில் அதிகரித்து வரும் மின் தேவையை சீராக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது வெயில் காலத்தையொட்டி மின்தேவை அதிகரித்துள்ளது. இந்த மின்தேவையை சீராக்கும் வகையில் பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வரும் மே 2 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 2 மணி வரை இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: அசாதுதீன் ஒவைசிக்கு, இந்திய முஸ்லீம் ஆகிய நான் எழுதிக்கொள்வது...!
இதுக்குறித்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் வெளியிட்ட வீடியோவில், பஞ்சாபில் மின் தேவை மதியம் 1.30 மணிக்கு மேல் அதிகரிக்கத் தொடங்குகிறது. அரசு அலுவலங்களை மதியம் 2 மணிக்கு மூடினால், மின் நுகர்வு அதிகரிப்பதை 300 முதல் 350 மெகாவாட் வரை குறைக்க முடியும். இதுகுறித்து அரசு ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: மனைவிக்கு திடீரென விவாகரத்து கொடுத்த மருத்துவர்... மனதை உலுக்கிய பின்னணி!!
பஞ்சாப் அரசு அலுவலகங்கள் தற்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. இந்த பணி நேரத்தை மே 2 ஆம் தேதி முதல் காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்ற பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் ஜூலை 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அரசு அலுவலகங்களில் செய்யப்படும் இந்த பணி நேர மாற்றத்தால், கோடை காலத்தில் மின் தேவை அதிகரிப்பை குறைக்க முடியும். நானும் எனது அலுவலகத்துக்கு காலை 7.30 மணிக்கு செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.