மனைவிக்கு திடீரென விவாகரத்து கொடுத்த மருத்துவர்... மனதை உலுக்கிய பின்னணி!!
தனது மரணத்தை அறிந்த மருத்துவர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன் இறுதிசடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது மரணத்தை அறிந்த மருத்துவர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன் இறுதிசடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கம்மத்தை அடுத்த ஸ்ரீநவாஸ்நகரைச் சேர்ந்தவர் எபுரி ராமராவ். இவருக்கு பிரமீளா என்ற மனைவியும் ஹர்ஷ்வர்தன் மற்றும் அகில் என்ற இரண்டு மகன்களும் இருந்தனர். இதில் ஹர்ஷ்வர்தன், தனது மருத்துவ படிப்பை முடித்துக்கொண்டு 2013 இல் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்று அங்கு உயர் படிப்பை மேற்கொண்டார். குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கிலும் வேலை செய்யத் தொடங்கினார்.
இதையும் படிங்க: ஆசியாவின் மிக நீண்ட ஜோஜிலா சுரங்கப்பாதை! அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு!
இவருக்கு பிப்ரவரி 2020 இல், திருமணம் ஆனது. திருமணத்திற்கு பின் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய அவர் விரைவில் தன்னையும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வார் என அவரது மனைவி நம்பினார். இதனிடையே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது, இதை அடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஹர்ஷவர்தன் தனது ஆரம்ப சிகிச்சையை ஆஸ்திரேலியாவில் எடுத்துக்கொண்டார், எல்லாம் சரியாகிவிட்டது போல் இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் கம்மம் வந்த அவர், ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முன்பு தனது குடும்பத்துடன் 15 நாட்கள் தங்கினார்.
இதையும் படிங்க: அசாதுதீன் ஒவைசிக்கு, இந்திய முஸ்லீம் ஆகிய நான் எழுதிக்கொள்வது...!
அந்த நேரத்தில், ஹர்ஷ்வர்தன் இனி நீண்ட காலம் வாழப் போவதில்லை என்ற கடுமையான யதார்த்தத்தை அறிந்து கொண்டார். இதை அடுத்து உடனடியாக தனது மனைவியை விவாகரத்து செய்தார். மேலும் இறுதிச் சடங்கிற்காக அவரது உடல் கம்மம் வருவதை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். கடந்த சில நாட்களாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த அவர் தனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றிவிட்டு ஆஸ்திரேலியாவில் காலமானார். அவர் தனது இளைய சகோதரரின் திருமணத்திற்கு வரவிருந்தார். ஆனால் விதி அவருக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தது. ஹர்ஷ்வர்தனின் விருப்பப்படியே அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றாலும் பெற்றோர்களும் நண்பர்களும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.