சந்திரயான்- 3 விணகலத்தை வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்- 3 விணகலத்தை வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ சர்ந்திரயான் -3 விணகலத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு எழுத்து மூலம் அளித்த பதில் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் , சந்திரயான் 3க்கான அடிப்படை பணிகள் மற்றும் சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக கூறினார். வரும் ஆக்ஸ்ட் மாதம் சந்திரயான் 3ஐ விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சந்திரயான் 2லிருந்து கற்றுக் கொண்ட அனுபவம் மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்து நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். நடப்பாண்டில் 19 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாகவும், இந்த வருடத்தின் முதல் திட்டமாக, பிப்ரவரி 2வது வாரத்தில் ரிசாட்-1ஏ என்றழைக்கப்படும் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக ஜிதேந்திர சிங் பதிலளித்தார். இந்த ரிசாட் 1ஏ செயற்கைகோள் பூமியை கண்காணிக்கும் என்று குறிப்பிட்டார். நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

அதனைத் தொடர்ந்து சந்திரயான் 2 விண்கலம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்த ரோவர் கருவி மூலம் நிலவின் மேற்பரப்பை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் சந்திரயான் 2 விணகலத்தில் இருந்த ஆர்பிட்டர் கருவியில் இருந்து பிரிந்த ரோவர் நிலவில் தரையிரங்க சில மணி நேரங்களே இருந்தபோது லேண்டர் கருவி நிலவில் மோதியததால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. இருப்பினும் ஆர்பிட்டர் மட்டும் தொடர்ந்து நிலவை சுற்றி ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
