சந்திரயான் 3.. இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஓர் புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்!
பல்வேறு ஆராய்ச்சிகளை மனதில் கொண்டு இந்தியாவின் ஒரு கனவு திட்டமாக இந்த சந்திரயான் 3 இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

விண்வெளித் துறை வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லை இன்று இந்தியா எட்டியுள்ளது என்றால் அது மிகையல்ல. பல நூறு பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அயராத உழைப்பினால் இன்று சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இன்று மதியம் சரியாக 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட சந்ததியான் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி அல்லது 24ம் தேதி வாக்கில் மெது மெதுவாக நிலவில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரை இறங்குவதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் செப்டம்பர் மாதம் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் அளவிற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி நிலவின் தென்பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விஞ்ஞானிகள் சந்திரயான் 2ஐ அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் 3!!
பல்வேறு ஆராய்ச்சிகளை மனதில் கொண்டு இந்தியாவின் ஒரு கனவு திட்டமாக இந்த சந்திரயான் 3 இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஜூலை 14ம் தேதி இந்திய விண்வெளி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்துள்ளது. இந்நிலையில் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டதை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.
"இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை சந்திரயான் 3 எழுதியிருக்கிறது. இந்தியர்களின் கனவுகளும், லட்சியங்களும் இன்னும் அதிக உயரமாகிக் கொண்டே இருக்கிறது.இந்த முக்கியமான சாதனை, நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கும், திறமைக்கும் ஒரு சான்றாகும். நமது விஞ்ஞானிகளின் அறிவுக்கு நான் தலை வணங்குகிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம்.. இஸ்ரோ தகவல்..