வெற்றிப்பயணத்தின் இறுதிக்கட்டத்தில் சந்திரயான் 3.. விக்ரம் லேண்டர் பிரியும் புகைப்படத்தை வெளியிட்ட ISRO!
திட்டமிட்டபடி சந்திரயான் -3ன் லேண்டர் விக்ரம் இன்று விண்கலத்தின் உந்துவிசை தொகுதியில் இருந்து பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. லேண்டர் மற்றும் ரோவர், பிரக்யான், ஆகஸ்ட் 23 அன்று நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான்-3 அதன் ஐந்தாவது மற்றும் நிலவின் கடைசி சுற்றுப்பாதை சுழற்சியை நேற்று வெற்றிகரமாக முடித்தது, இந்த நிகழ்வால் அதன் விண்கலத்தை நிலவின் மேற்பரப்புக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு சென்றுள்ளது. விக்ரம் லேண்டர் சந்திராயன் 3ன் உந்துவிசை தொகுதியிலிருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில். விக்ரம் லேண்டர் அடுத்த புதன்கிழமை நிலவில் மெதுவாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுற்றுப்பாதையில் இருந்து, நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான் 3ஐ மெதுவாக தரையிறக்கம் செய்யும் பணிகள் வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ரோவர் நிலவின் மேற்பரப்பின் இரசாயன கலவையில் சோதனைகளை நடத்தி தண்ணீரை தேடும். இந்த ரோவர் 14 நாட்கள் தனது வேலையை செய்யும் அளவிற்கு திறன் கொண்டது. இது நிலவை பொறுத்தவரை ஒரு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், உந்துவிசை தொகுதி சந்திரனைச் சுற்றி தொடர்ந்து பூமியின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும். இது நமது வாழ்விடத்திற்கு தகுதியான சோதனைகளை அங்கு மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று, ஆகஸ்ட் 16ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை சந்திரனைச் சுற்றி 153 கிலோமீட்டர் 163 கிலோமீட்டர் வட்ட வட்டப்பாதையில் இஸ்ரோ வெற்றிகரமாக நிலைநிறுத்தியது, இதனையடுத்து சந்திரயான் இப்பொது அனைத்து சந்திர சூழ்ச்சிகளையும் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலவு பயணத்தில் இணைந்து பணியாற்ற ஜப்பானுடன் இந்தியாவும் ஆலோசித்து வருவதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். இந்தியர்கள் அனைவரும் பெருமைகொள்ளும் விதமாக சந்திராயனின் நிலவு பயணம் உள்ளது.