நிலவை நெருங்கிய சந்திரயான் 3; வைரலாகும் விக்ரம் லேண்டர் கேமரா அனுப்பிய புகைப்படங்கள்!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கனவுத் திட்டமான சந்திரயான்-3 ஆகஸ்ட் 23ஆம் தேதி (புதன்கிழமை) நிலவில் மென்மையாகத் தரையிறங்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நிலவை நெருங்கியுள்ள சந்திரயான் 3 சில புகைப்படங்களை கட்டுப்பாடு அறைக்கு அனுப்பியுள்ளது.
சந்திரயானில் பொருத்தப்பட்டுள்ள Lander Hazard Detection and Avoidance Camera (LHDAC) நிலவின் சில புகைப்படங்களை அனுப்பியுள்ளது. பாறாங்கற்கள் அல்லது ஆழமான குழிகள் இல்லாமல் பார்த்து நிலவில் லேண்டரை இறக்குவதற்கு இந்த கேமரா உதவி செய்யும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்த கேமராவில் நிலவின் புகைப்படங்கள் பதியப்பட்டுள்ளன. அதற்கு ஏற்றவாறு நிலவின் தரைப்பகுதியுடன் தொடர்புபடுத்தி பார்த்து லேண்டரை தரையிறக்கும். முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவும் தொழில்நுட்பத்தில் இந்த கேமரா இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிநடை போடும் சந்தியரான்-3! நிலவில் தரையிறங்குவதை பார்த்து ரசிக்க இஸ்ரோ சிறப்பு ஏற்பாடு!
சந்திரயான் 3, நிலவின் தென் துருவப் பகுதியில் நாளை மறுநாள் புதன்கிழமை மாலை 6:04 மணிக்கு தரையிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திரயான் -3ன் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் சமீபத்திய படங்கள் அதன் தொலைவில் உள்ள சில முக்கிய பள்ளங்களை அடையாளம் கண்டுள்ளன, அவை பொதுவாக பூமியில் இருந்து பார்க்கும்போது கண்க்கு புலப்படாமல் மறைந்திருக்கும் பாகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவின் இந்த தொலைதூரப் பக்கமானது நிலவின் அரைக்கோளமாகும், இது நிலவின் சுற்றுப்பாதையில் ஒத்திசைவான சுழற்சியின் காரணமாக எப்போதும் பூமியிலிருந்து பார்க்கும்போது அவை புலப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் புதன்கிழமை இறுதிக்கட்டமாக நிலவில் இறங்கியதும், பிரக்யான் ரோவர் தன்னைத் தாங்கி வந்த விக்ரம் லேண்டரை படம் பிடிக்கும். அதேபோல லேண்டரும் தான் நிலவில் தரையிறக்கிய ரோவரை படம் பிடிக்கும். இந்தியா நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதற்கு சாட்சியாக அமையப்போவது இந்த இரண்டு படங்கள் தான்.