சந்திரயான்-3 'மூன் வாக்'! பிரக்யான் ரோவர் 8 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரின் அனைத்து இயக்கங்களும் சரிபார்க்கப்பட்டதாவும் ரோவர் சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.

Chandrayaan 3 Mission: Pragyan rover moves 8 meter on Moon

சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியதும் 8 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாக இஸ்ரோ கூறியிருக்கிறது. விண்கலத்தின் அனைத்து தொகுதிகளும் அதனதன் பணிகளைச் செய்துவருவதாகவும் உறுதிபடுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, "ரோவரில் திட்டமிடப்பட்ட அனைத்து இயக்கங்களும் சரிபார்க்கப்பட்டன. ரோவர் சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. ரோவரில் உள்ள பேலோடுகளான LIBS மற்றும் APXS ஆகியவை இயக்கப்பட்டுள்ளன." என்று கூறியுள்ளது.

மேலும், விண்கலத்தின் உந்துவிசை தொகுதி, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய அனைத்து பேலோடுகளும் செயல்படுகின்றன எனவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 பணியில் மூழ்கியதால் சகோதரியின் திருமணத்தைத் தவறவிட்ட இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் மென்மையான தரையிறங்கம் செய்தது. அதைத் தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது.

இஸ்ரோ நிலவில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு புதிய தகவல்களைப் பகிர்ந்து வருகிறது. அந்த வகையில் காலையில் பிரக்யான் ரோவர் லேண்டரில் இருந்து தரையிறங்கிய காட்சியின் வீடியோவை வெளியிட்டது. லேண்டரில் இருந்து நிலவின் தரைப்பகுதி வரை நீண்ட சாய்வுப் பாதையில் லேண்டர் சறுக்கிச் சென்று நிலவைத் தொட்ட காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வரைலானது.

ரோவர் செல்வதற்காக லேண்டரில் அமைக்கப்பட்ட சாய்வுப் பாதை இரட்டை வழி பாதையாக இருந்தால் ரோவர் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இறங்கியதாகவும் கூறியுள்ளது.

ரோவர் இறங்கிச் செல்லும்போது சூரியன் இருக்கும் திசையை நோக்கித் திரும்பும் காட்சியின் வீடியோவையும் இஸ்ரோ ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது. ஆறு சக்கரங்கள் கொண்ட ரோவர் நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. அதற்கு ரோவர் சூரிய மின்தகடுகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டும். அதற்கு ஆயத்தமாக இறங்கும்போது ரோவர் சூரிய மின்சக்தி உற்பத்திக்கு வசதியாக சூரியனைப் பார்த்துத் திரும்பி வேலை செய்யத் தொடங்கியுள்ளது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.

மேலும் சந்திரயான்-3 பணியில் மொத்தம் 26 வரிசைப்படுத்தல் வழிமுறைகள் பயன்படுவதாகவும் அவை பெங்களூரில் உள்ள யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம் (யுஆர்எஸ்சி) மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் இஸ்ரோ ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி ஆவது தான் லட்சியமா? 10ஆம் வகுப்பில் இருந்தே திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios