தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது போல் ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகை சிறப்பாக நடைபெறும், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த ஊரான சித்தூர் மாவட்டம் சந்திரகிரியை அடுத்த நரவரிபள்ளி கிராமத்தில் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் உடன் சங்காராந்தி கொண்டாடினார்.

மேலும் பகுதி இளைஞர் மற்றும் குழந்தைகள் உடன் கோலி, கில்லி, பம்பரம் ஆகிய விளையாட்டு விளையாடி தாரை தப்பாட்டம் அடித்து ஆடிப் பாடினார். அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

ஆந்திராவில் பெரும்பாலான இடங்களில் உச்சநீதிமன்ற தடையை மீறி பல இடங்களில் சேவல் சண்டை நடைபெற்றது. அதனை ஆளும் கட்சிகள் நிர்வாகிகள், பிற கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

பீட்டா அமைப்பு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய போதிலும் ஆந்திராவில் தடை மீறி சேவல் நடத்தப்பட்டது. பல இடங்களில் சேவல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட போதிலும் போலீசார் சென்ற பிறகு மீண்டும் தடையை மீறி பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது.