இரவு முழுவதும் மிரட்டல் அழைப்புகள் வந்தன: அனில் அந்தோணி பேட்டி
பிபிசி ஆவணப்படம் தொடர்பாக கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள அனில் கே அந்தோணி தனக்கு இரவு முழுக்க மிரட்டல் அழைப்புகள் வந்ததாகக் கூறியுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த பிபிசி செய்தி நிறுவனம் தயாரித்த ஆவணப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்ட அவர் தனது ராஜினாமா கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
“கடந்த 24 மணி நேரத்தில் பல விஷயங்கள் நடந்துவிட்டன. குறிப்பாக காங்கிரஸின் சில நடவடிக்கைகள் என்னை மிகவும் காயப்படுத்தி இருக்கின்றன. எனது ட்வீட்டிற்குப் பிறகு, இரவு முழுவதும் எனக்கு மிரட்டல் அழைப்புகள் வந்தன.
இவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இது எவ்வளவு தோறும் போய்விட்டது என்பதுதான் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது”
இவ்வாறு அனில் கே ஆண்டனி ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
முன்னதாக பிபிசியின் ஆவணப்படம் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட அவர், “பாஜகவுடன் பெரிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நான் நினைப்பது என்னவென்றால்... பிரிட்டன் அரசு சார்பில் நடத்தப்படும் பிபிசி நிறுவனம் இந்தியர்களைப் பற்றி நீண்டகாலமாகவே தவறான எண்ணம் கொண்டுள்ளது. ஈராக் போருக்கு மூளையாக இருந்த, பிரிட்டன் முன்னாள் உள்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ராவின் கருத்தை இந்திய நிறுவனங்கள் மீது பதிப்பது ஆபத்தான முன்னுதாரணம். இது நமது இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை ட்விட்டரில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக வெளியிட்ட அறிவிப்பில், “காங்கிரஸ் கட்சியில் எனக்கு அளிக்கப்பட்ட பதவிகளிலிருந்து நான் விலகுகிறேன். என் ட்வீட்டுக்குப் பின் பேச்சு சுதந்திரத்துக்கு போராடுகிறவர்களிடம் இருந்து சகிப்புத்தன்மையற்ற அழைப்புகள் வந்தன. நான் அவர்களுக்கு உடன்பட மறுத்துவிட்டேன். அன்பை ஊக்குவிக்கிறேன் என்ற பெயரில் வெறுப்பு வளர்க்கப்படுகிறது. அனைத்தும் போலித்தனம். என்னுடைய ராஜினாமா கடிதத்தை இணைத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறு வியாபாரிகளுக்கு மரியாதை