குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறு வியாபாரிகளுக்கு மரியாதை
குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகளை முதல் வரிசையில் அமர்ந்து பார்வையிட, விஐபிகளுக்குப் பதிலாக சிறு வியாபாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசியக் கொடியை ஏற்றிவைப்பார். பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.
எகிப்து நாட்டின் அதிபர் அல் சிசி இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். எகிப்து சார்பில் 120 பேர் கொண்ட சிறப்பு அணிவகுப்பு ஒன்றும் நடக்க உள்ளது.
சாமானிய மக்களின் பங்கேற்புக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் இந்த ஆண்டு நடைபெறும் அணிவகுப்பு நிகழ்வை முதல் வரிசை இருக்கையில் அமர்ந்து பார்வையிட, விஐபிகளுக்குப் பதிலாக ரிக்ஷா வண்டி ஓட்டுபவர்கள், சிறு வியாபாரம் செய்துவரும் காய்கறி கடைக்காரர்கள், மளிகை கடைக்கார அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏகே அந்தோனியின் மகன் அனில் அந்தோனி காங்கிரஸில் இருந்து விலகல்
இதேபோல பத்ம விருதுகளிலும் சாமானி மக்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், கடந்த ஆண்டு கிராம கலைஞர்கள், சமூக சேவகர்கள், இசைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் பத்ம விருதுகளைப் பெற்றனர்.
இந்த ஆண்டு பார்வையாளர்களுக்கான மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 45 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் 32 ஆயிரம் இருக்கைகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது.
பழங்குடியினர் விவகாரங்கள் துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்புகளில் இடம்பெற உள்ளன. 18 ஹெலிகாப்டர்கள், 8 போக்குவரத்து விமானங்கள், 23 போர் விமானங்கள் பங்கேற்கின்றன.
கோத்ரா கலவரத்தில் 17 பேர் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேரை விடுதலை செய்தது குஜராத் நீதிமன்றம்