மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது? மத்திய அரசின் திட்டம் இதுதான்!
2025ல் மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடங்க உள்ளது. எனினும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
4 ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை 2025-ம் ஆண்டு மத்திய அரசு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை 2025 இல் தொடங்கி 2026 வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து, மக்களவைத் தொகுதிகளின் மறுவரையறை பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த பணிகள் 2028 ஆம் ஆண்டளவில் முடிவடையும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல எதிர்க்கட்சிகளின் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய அரசு இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
"ஜெர்மானிய உபகரணங்களை வாங்க கூடாது" ரயிலில் நடந்த பியூஷ் கோயிலின் காரசார விவாதம் - Viral Video!
எனினும், அடுத்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் மதம் மற்றும் சமூக வகுப்பின் வழக்கமான வகைப்பாடு மற்றும் பொது, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை ஆகியவற்றுடன், பொது மற்றும் SC-ST வகைகளுக்குள் உள்ள துணைப்பிரிவுகளின் கணக்கெடுப்புகளும் அடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து தகவல் வெளியான நிலையில், சாவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான விஷயங்களை தெளிவுபடுத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தங்கள் ஆதரவைப் புதுப்பித்துள்ளனர். ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அரசு அடுத்த ஆண்டு நடத்தினால் அதற்கு ஆதரவாக இருப்பதாக ஜேடியு தெரிவித்துள்ளது.
4-ஆண்டு தாமதத்திற்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு
தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிக்க பொதுவாக ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கோவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு சுழற்சியும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஆகஸ்ட் மாதம் பேசி இருந்தார். அப்போது, "இது சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும். முடிவு செய்தவுடன், அது எப்படி செய்யப்படும் என்பதை அறிவிப்பேன்" என்று கூறியிருந்தார். அடுத்த தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மொபைல் போன் பயன்பாடு மூலம் முழுமையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் அமித்ஷா குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2011-ம் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 121 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை பதிவாகியுள்ளது, இது 17.7 சதவீத வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது.