"ஜெர்மானிய உபகரணங்களை வாங்க கூடாது" ரயிலில் நடந்த பியூஷ் கோயிலின் காரசார விவாதம் - Viral Video!
Piyush Goyal : சீனாவில் இயந்திரங்களைத் தயாரிக்கும் ஹெர்ரென்க்னெக்ட் என்ற ஜெர்மன் நிறுவனத்திடமிருந்து டன்னல் போரிங் மெஷின்களை இந்தியா வாங்குகிறது என்றும், அவற்றை இந்தியாவுக்கு விற்க சீனா அனுமதிக்கவில்லை என்றும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
ஜெர்மனி, சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை இந்தியாவிற்கு விற்பதற்கு சீனா தடை விதித்தது தொடர்பாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஜெர்மனி துணைவேந்தர் ராபர்ட் ஹேபெக்கை இன்று சனிக்கிழமை சந்திக்க நேரிட்டது. அப்போது இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ந்து ஏற்பட்டால், ஜெர்மனியிடம் இருந்து இந்தியா இயந்திரங்களை வாங்குவதை நிறுத்தும் நிலை ஏற்படும் என்று கோயல் கூறினார். டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்த இந்த காரசார மோதல் வீடியோ இப்பொது வைரலாக பரவி வருகிறது.
ஜெர்மனியின் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராகவும் இருக்கும் ராபர்ட் ஹேபெக், 7வது இந்தியா-ஜெர்மனி இடையேயான அரசுகளுக்கு இடையேயான ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள துவாரகாவில் உள்ள யஷோபூமி கன்வென்ஷன் சென்டரை அடைய டெல்லி மெட்ரோவில் பியூஷ் கோயலுடன் அவர் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, பியூஷ் கோயல் ராபர்ட் ஹேபெக்கிடம், "சீனாவில் இயந்திரங்களைத் தயாரிக்கும் ஹெர்ரென்க்னெக்ட் என்ற ஜெர்மன் நிறுவனத்திடமிருந்து, இந்தியா டன்னல் போரிங் மெஷின்களை வாங்குகிறது" என்று கூறினார்.
உபி அதிகாரிகளின் செயல்திறன்: முதலீடு அடிப்படையில் மதிப்பீடு!
இந்தியாவிற்கு TBMகளை விற்பனை செய்வதை சீனா இப்போது தடுக்கிறது என்று அவர் ஜெர்மன் அமைச்சரிடம் தெரிவித்தார். மேலும் அது இந்தியாவின் உள்கட்டமைப்பின் அளவை எப்படி பாதிக்கிறது என்பது குறித்தும் பேசினார். இந்நிலையில் இந்தச் சம்பவத்தின் வீடியோவை 'லார்ட் பெபோ' என்ற ஒருவர் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கோயலுக்கு ஹேபெக் பதிலளித்த விதத்தையும் விமர்சித்துள்ளார். அந்த வீடியோவில், கோயல்.. “உங்கள் ஜெர்மன் நிறுவனம் சீனாவில் தயாரிக்கும் சில சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை எங்களுக்கு வழங்குகிறது. ஆனால், அவற்றை எனக்கு விற்க சீனா அனுமதிக்கவில்லை" என்று சொல்வதை கேட்கமுடிகிறது.
மேலும் அவர் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயர் ஹெரென்க்னெக்ட் என்று கூறியபோது, ராபர்ட் ஹேபெக் அந்த நிறுவனதின் பெயரைப் பற்றிய தெரியாதது போல காட்டிக்கொண்டார். மேலும் அவர் "அவர்கள் சீனாவில் உற்பத்தி செய்கிறார்களா?" என்று கேட்க, அதற்கு பியூஷ் கோயல் ஆம் என்று பதிலளித்தார். அதன் பிறகு பியூஷ், "நாம் இப்போது ஜெர்மன் உபகரணங்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும்" என்று கூறினார். இவ்வளவு விஷயம் நடக்கும் வரை அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ராபர்ட், இறுதியில் பியூஷ் ஜெர்மன் பொருள்களை தவிர்க்க வேண்டும் என்று கூறியபோது தான் எழுந்து நின்று "நான் உங்கள் பேச்சை கேட்கவேண்டும் என்று நினைக்கிறன்" என்று கூறினார்.
நம்ம ஊர்ல ஓடுர ரயில் எத்தனை கி.மீ. மைலேஜ் தரும்னு தெரியுமா?