Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசு அதிரடி... குறைந்தது பெட்ரோல் - டீசல் விலை...! பெருமூச்சு விட்ட மக்கள்!

பெட்ரோல் - டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Centre Goverement...Rs 2.50 per litre relief on petrol, diesel
Author
Delhi, First Published Oct 4, 2018, 4:18 PM IST

பெட்ரோல் - டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். Centre Goverement...Rs 2.50 per litre relief on petrol, diesel

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசு, பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. Centre Goverement...Rs 2.50 per litre relief on petrol, diesel

பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் தங்கள் லாபத்தில் இருந்து ரூ.1 இழப்பை ஏற்றுக் கொள்வதென்றும் முடிவு செய்துள்ளன. பிரதமர் மோடியின் தலையீட்டின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவு காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் - டீசல் விலை ரூ.2.50 குறைந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios