central ministry approve to privatisation of air india

தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, 52 ஆயிரம் கோடி ரூபாய் கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில், தனியார் விமான சேவை நிறுவனங்களுக்கு, இதன் பங்குகளை விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான அமைச்சரவைக் குழு, இதுபற்றி விரிவாக ஆலோசித்து, அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் ஏர்-இந்தியா விமான நிறுவன பங்குகளை விற்பனை செய்ய ‘நிதி ஆயோக்’ அமைப்பு சிபாரிசு செய்துள்ளது.

எவ்வளவு பங்குகளை விற்கலாம் என்பது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் தீர்மானிக்க மத்திய நிதி மந்திரி தலைமையில் மந்திரிகள் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.