மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடக்க உள்ளது.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கடந்த மாதம் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது, சிறுநீரக கோளாறு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்காக அவரது, உறவினர்களின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர்களது சிறுநீரகம் பொருந்தவில்லை. இதையடுத்து வெளியில் இருந்து சிறுநீரகம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையறிந்த ஏராளமானோர், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜிக்கு, தங்களது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன் வந்தனர். இதற்கு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவருக்கும் நன்றி தெரிவித்து, கருத்து வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று சுஷ்மா சுவராஜிக்கு, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனைத்து பரிசோதனைகளும் முடிந்து, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
