Asianet News TamilAsianet News Tamil

போலி செய்திகளை பரப்பினால் கிரிமினல் வழக்கு பதியப்படும்... யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!!

போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் முடக்கப்படுவதோடு அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

central govt warns youtube channels for spreading fake news
Author
First Published Sep 22, 2022, 4:32 PM IST

போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் முடக்கப்படுவதோடு அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. யூடியூப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் தவறான தகவல்கள் மற்றும் செய்திகளால் நாட்டின் இறையான்மை பாதிக்கப்படுவதோடு, மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. சமூக வலைதளங்களில் பலர் தனியாக யூடியூப் சேனல்கள் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை: சாம்சங் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்

சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டை சீர்குலைக்கும் வகையிலும் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருவதால் தேவையில்லான பிரச்சினைகள் உண்டாகிறாது. மேலும் போலியான செய்திகளையும் வெளியிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் 100க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன.

இதையும் படிங்க: அனைத்து வகையான வகுப்புவாதமும் வன்முறையும் சகித்துக் கொள்ள முடியாதது: ராகுல் காந்தி!!

இதில் பெரும்பாலான யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டது என கூறப்பட்டது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இந்த நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்களை முடக்கி தன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios