முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை அடுத்து அவர்கள் 7 பேரும் சிறையில் இருந்தனர்.

இதையும் படிங்க: காசி தமிழ் சங்கமம்; தமிழ்நாட்டு பிரதிநிதிகளை பனாரஸில் வரவேற்கிறார் பிரதமர் மோடி!!

இதனிடையே பேரறிவாளனை கடந்த மே.18 ஆம் தேதி சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த நிலையில் மற்ற 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு அவர்களையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம்… யார் அவர்?

இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், மத்திய அரசின் கருத்தை கேட்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது முன்னாள் பிரதமரின் கொலை வழக்கு என்பதால், உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் முன்பு மத்திய அரசை விசாரித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.