Asianet News TamilAsianet News Tamil

மாணவர்களுக்கு வருஷம் ரூ.50,000 கல்வி உதவித்தொகை... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 வரை மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. 

central govt scholarship scheme for minority school students and here the details
Author
First Published Oct 21, 2022, 9:35 PM IST

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 வரை மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் சிறுபான்மை இனத்தவருக்கு மத்திய அரசு சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிறுபான்மையின மாணவர்களுக்கு, ப்ரீ மெட்ரிக் உதவித் தொகை (Pre Matric Scholarships Scheme for Minorities), போஸ்ட் மெட்ரிக் சிறுபான்மையின உதவித் தொகை, தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான உதவித்தொகை (Merit Cum Means Scholarship For Professional and Technical Courses) மற்றும் பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகை (BEGUM HAZRAT MAHAL NATIONAL SCHOLARSHIP) ஆகியவை வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க: தமிழ்நாடு மோசம்.! துணைவேந்தர் பதவி 40 கோடிக்கு விற்பனை - சர்ச்சையை கிளப்பிய பன்வாரிலால் புரோகித்

கல்வித் தகுதியில் சிறந்து விளங்கும் சிறுபான்மையின மாணவர்கள் படிப்பதை ஊக்குவிக்க இந்த உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் படிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், ஜெயின்கள், பார்சிக்கள், பவுத்தர்கள் மற்றும் சீக்கிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவரின் வசிப்பிடம் எந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநிலத்தைச் சார்ந்தே உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? 

  • 18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 
  • 18 வயதுக்குக் குறைவான மாணவர்கள், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

தகுதிகள்:

  • பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது. 

இதையும் படிங்க: 20 வயது பெண்ணை திருமணம் செய்த 70 வயது முதியவர்.. கதறும் 90ஸ் கிட்ஸ்.!

ஆவணங்களின் விவரம்: 

  • மாணவர் புகைப்படம்.
  • கல்வி நிறுவனத்தின் சரிபார்ப்புப் படிவம்.
  • தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ்
  • 18 வயதை அடைந்த மாணவர்களிடம் இருந்து சுய சான்றளிக்கப்பட்ட சாதிச் சான்றிதழ். 18 வயதுக்குக் கீழான மாணவர்களுக்கு பெற்றோர்/ பாதுகாவலரால் சான்றளிக்கப்பட்ட சாதிச் சான்றிதழ்.
  • மதிப்பெண்  சான்றிதழ்
  • தற்போதைய பாட ஆண்டுக்கான' கட்டண ரசீது.
  • மாணவர்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு
  • வங்கிக் கணக்கு எண் விவரங்கள் (சொந்த வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, பெற்றோர்/ பாதுகாவலர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள்).
  • குடியிருப்புச் சான்றிதழ்.
  • மாணவரின் ஆதார் எண். ஆதார் இல்லை என்றால் பள்ளி/ கல்லூரி நிறுவனத்தில் இருந்து பெறப்படும் சான்றிதழ்.
Follow Us:
Download App:
  • android
  • ios