வரும் 2050ம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வால், நாட்டில் கடற்கரை ஓரங்களில் வசிக்கும் 4 கோடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ ஆசியா மற்றும் பசிபிக் கடல்பகுதிக்கான உலக சுற்றுச்சூழல் தோற்ற அறிக்கை கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சியில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் கடல் நீர் மட்டும் உயரும் ஆபத்து இருப்பதால், ஏறக்குறைய 4 கோடி மக்கள் வரை பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பருவநிலை மாறுபாடு குறித்த செயல்திட்டம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் உள்ளகடற்கரை நீர் மட்டம் 3.5 முதல் 34.6 இன்ஞ் வரை 1900 மற்றும் 2100  ஆண்டுகளில் உயரும் என எதிரவிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடல்நீர் ஊருக்கு புகுதல், நிலத்தடி நீர் மாசுபடுதல், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு, மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

மேலும் கடந்த 2011ம் ஆண்டு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் தொடர்பான அறிவிக்கையை அரசு வௌியிட்டது. அதில் கடற்கரையில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது, மற்ற சமூகத்தினரையும், கடற்கரையில் வசிக்கும் மக்களையும், அப்பகுதியையும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கடல்மட்டம் உயர்வை கருத்தில் கொண்டு, ேமப்பிங், நிலத்தடி நீரில் உப்புநீர் புகாமல் தடுத்தல், பாதிக்கப்பட்ட பகுதியை வரையறை செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ எனத் தெரிவித்தார்.